Friday, September 7, 2007

நான் விஞ்ஞானி இல்லை கோமாளிதான் !! கலாம்-இன் ஒப்புதல் வாக்குமூலம் !!

இன்று நாடு மறுகாலனியாக்கப்பட்டு வருவதன் உச்சக்கட்டம் தான் அணுசக்தி ஒப்பந்தம் , இந்தியாவின் அரைகுறை இறையாண்மையையும் காவு கேட்கிறது.

2005 இல் அமெரிக்காவுடன் போடப்பட்ட இராணுவ ஒப்பந்தத்தின் ஒரு சரத்து தான் இந்த 123 ஒப்பந்தம். 123 ஒப்பந்தம் உள்பட மத்திய அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் (நாட்டை அன்னியனுக்கு விற்பதில்) ஒத்து ஊதி இருந்திட்டு இப்ப எதிர்க்கிற மாதிரி நடிக்கிற போலி கம்யூனிஸ்டுகளை போல ஒத்து ஊதின இன்னொரு சுகபோகி நம்ம அரசவை கோமாளி கலாம்.
..
லட்சக்கணாக்கான விவசாயி தற்கொலை செய்த நாட்டில், 83 கோடி பேருடைய தினசரி வருமானம் ரூ 20 ஆக இருக்கும் நாட்டில் அனைத்தையும் மூடி மறைத்து இந்திய நாடு 2020 வல்லரசு ஆகிவிடும் என்று நாடு படுதீவிரமாக மறுகாலனியாக்கப்பட்டு வருவதை மூடிமறைத்த இந்த கோமாளியும் 2005ல் போடப்பட்ட அடிமை சாசனம் (123) பற்றி வாய் திறக்கவே இல்லை.
.
இப்போது அடிமை சாசனம்(123) அமுல்படுத்த போகிற போது எதிர்க்கிற மாதிரி நாடகம் ஆடுகிற போலிகளை விட அப்பட்டமான அமெரிக்க அடிமை நாயாக காட்டி கொண்டு இருக்கிறார் கலாம்.
.
விஞ்ஞானிகள், நாட்டுப்பற்றாளர்கள், பத்திரிக்கையாளார்கள் என அனைவரும் 123 என்பது ஒரு அடிமை சாசனம் என்று கிழித்து வருகின்ற இந்த சூழ்நிலையில்; கலாம் நேற்று 'அணுசக்தி ஒப்பந்தம் அபூர்வமானது; முக்கியமானது' என்று கூறி தான் ஒரு கோமாளிதான் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.


இந்த ஆளு விஞ்ஞானியாக இருந்திருந்தால் "அடிமை சாசனம்" பற்றி தெரிந்து இருக்க வாய்ப்பு இருக்கும். கோமாளி யாச்சே ! அதுனால தான் ஒப்பதத்தைப் பற்றியோ அதனுடைய சரத்துகளைப் பற்றியோ வாய்திறக்காமல் ஒப்பந்தம் முக்கியமானது என்று 'மண்' மோகன் சப்பைக்கட்டுகளை விட கேவலமாக சப்பைக்கட்டு கட்டுகிறார்.
.
இதை விட அபாயகரமானது கோமாளியின் ' 2020 வல்லரசு' கனவு !
.
.நாட்டின் நிலை என்னவென்றே தெரியாமல் பேசுகிறார் கலாம். மறுகாலனியாதிக்கத்துக்கு உதரணமாக சென்னையை எடுத்துக் கொண்டால் -
  • சென்னை குடிசைகளில் 86% பேர் ஒரு வேளைதான் சாப்பிட்டு வருகிறார்கள்..
  • 44% குடிசைப்பெண்கள் ரத்த சோகையால் செத்துக்கொண்டிருக்கிறார்கள்...
    ஆட்சியாளர்களோ நிமிட்ஸ் கப்பலில் வந்திறங்கும் அமெரிக்க கொலையாளிகளுக்கு கோடம்பாக்கத்து துணைநடிகைகளைக் கூட்டிக்கொடுத்துக் காவல் நிற்கிறார்கள்
  • சென்னை குடிசைகளில் 21 சதவீதம் இளைஞர்களுக்கு ஒரு வேளை பட்டினிதான் பரிசாகக் கிடைக்கிறது.
  • நகர விரிவாக்கம் என்று அவர்களில் 75000 குடும்பங்களை சென்னையை விட்டுத் துரத்த உத்தரவு போடுகிறது உலக வங்கி..


இப்ப வேலை கொடு என்கிற மக்களை பார்த்து அணுகுண்டு தர்றேன் என்கிறார்கள் ஆட்சியாளர்கள்;

கனவு காணச்சொல்லுகிறார் கலாம்.

இப்படிப்பட்ட கோமாளியின் யோசனைகளை வைத்தும் சிலர் கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடிக்க (மக்களை கொள்ளையிட) கிளம்பி இருப்பது; கலாம் ஒப்புதல் வாக்குமூலத்தை விட நாட்டிற்கு அவர் ஏற்படுத்திய '2020' அபாயம் பயங்கரமானது என்பதை காட்டுகிறது.
நன்றி:கோபா

Related:
..

..

Tuesday, September 4, 2007

உங்களது எதிர்காலத்துக்காகவே இதைச் செய்கிறேன் ? - மண்மோகன் !!

Related:..
அமெரிக்க அடிமை நாய் மன்மோகன் வழங்கும் 123 அல்லது அடிமை சாசனம் !!
.123 ஒப்பந்தமும் போலி கம்யூனிஸ்டுகளின் நீலிக் கண்ணீரும் !..
60 ஆண்டு கால சுதந்திரம் யாருடைய நலன்களுக்காக பயன்பட்டு இருக்கிறது !!
மலபார் பன்னாட்டு கப்பல் பயிற்சியும் திரிபுவாதி சந்திப்பின் பித்தலாட்ட புரட்சியும்

நன்றி:கோபா

123 ஒப்பந்தமும் போலி கம்யூனிஸ்டுகளின் நீலிக் கண்ணீரும் !

பிரணாப் முகர்ஜி போட்ட கள்ளத்தனமாக இராணுவ ஒப்பந்தம் 2005-இலேயே அம்பலமாகிவிட்டது. அமெரிக்காவின் ஆணைப்படிதான் ஈரானுக்கு எதிராக இந்தியா வாக்களித்தது என்பதும் அடுத்து அம்பலமானது. எனினும் காங்கிரஸ் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை அப்போதெல்லாம் மார்க்சிஸ்டுகள் திரும்பப் பெறவில்லை. மாறாக, அமெரிக்க இராணுவமும் இந்திய இராணுவமும் மே.வங்களத்திலேயே கூட்டு போர் ஒத்திகை நடத்துவதற்கு போலீசு பாதுகாப்புக் கொடுத்தாரக்ள்.
..
"அணு ஆயுத ஒப்பந்தத்துக்கு எதிராகப் எதிராகப் பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வரப்போவதாக" என்ற சென்ற ஆண்டு பூச்சாண்டி காட்டினார் பிரகாஷ் காரத். "அப்படி தீர்மானம் கொண்டு வந்தால் இந்த அரசே இருக்காது" என்று பிரணாப் முகர்ஜி மார்க்சிஸ்டுகளை மிரட்டினார். உடனே சரணடைந்தார்கள்.இன்றைக்கு சவடால் அடிக்கிறார்கள்.

"உலகமயமாக்கத்தை எதிர்க்கவில்லை, அது மனிதமுகத்துடன் இருக்கவேண்டும்", "சிறப்பு பொருளாதார மண்டலத்தை எதிர்க்கவில்லை, விவசாயிகளுக்கு போதுமான நட்ட ஈடு கொடுத்து நிலத்தைப் பறிமுதல் செய்ய வேண்டும்". "பொதுத்துறைகளைத் தனியார்மயமாக்குவதை எதிர்க்கவில்லை, தொழிலாளர்களின் வேலைக்கு உத்திரவாதம் தரவேண்டும்" - இதுதான் போலி கம்யூனிஸ்டுகளின் அரசியல். இப்போது , "அணுசக்தி ஒப்பந்தம் வேண்டாம் என்று சொல்லவில்லை, நாட்டின் இறையாண்மைக்கு பெரும் பாதிப்பு வந்துவிடக் கூடாது" என்று பசப்புகிறாரக்ள்.

"தனிப் பெரும்பான்மை இல்லாத ஒரு சிறுபான்மை அரசு துரோகத்தனமான ஒப்பந்தத்தைத் திருட்டுத்தனமாக இந்திய மக்கள் மேல் திணித்திருக்கிறது. இந்த அரசைக் கவிழ்ப்பதில் என்ன குற்றம்?" என்று நாடாளுமன்ற அரசியலின் வரம்புக்குட்பட்டு கேள்வி எழுப்பும் தைரியமும்கூட இவர்களுக்கு இல்லை.
..
"இந்த அரசு நிலைக்குமா என்பதை நாங்கள் ஏன் சொல்ல வேண்டும், அதை காங்கிரசு முடி செய்து கொள்ளட்டும்" என்று பேடித்தனமாக மழுப்புகிறார்கள்.
..இந்த பசப்பல்களுக்கும், மழுப்பல்களுக்கும் காரணம் இருக்கிறது. "பன்னாட்டு நிறுவனங்களுக்கும் தரகு முதலாளிகளுக்கும் சலுகைகளை வாரி வழங்குவதன் மூலம் தான் நாட்டைத் தொழில்மயமாக்கி முன்னேற்ற முடியும்" என்ற கருத்தில் மன்மோகனுக்கும் மார்க்சிஸ்டுகளுக்கும் எந்தவித வேறுபாடும் இல்லை.அதனால்தான் சிங்கூரிலும் நந்திக்கிராமிலும் எத்தகைய அட்டூழியங்கள் நடந்தாலும் மார்க்சிஸ்டுகளுக்குக் கொள்கை பூர்வமாக ஆதரவுக் கரம் நீட்டுகிறார் மன்மோகன் சிங், " அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரிக்குமாறு புத்ததேவைத் தொலைபேசியில் கூப்பிட்டு உரிமையோடு கோரிக்கை வைக்கிறார்.கட்சித் தலைமை கூடி முடிவெடுப்பதற்கு முன்னதாகவே "காங்கிரசு அரசை கவிழ்க்க மாட்டோம்" என்று முந்திக் கொண்டு அறிக்கை விடுகிறார் ஜோதிபாசு.

அது மட்டுமல்லல் டாடா, அம்பானி போன்ற தரகு முதலாளிகள் முகம் சுளித்து வருத்தப்படும் படியான காரியம் எதையும் மார்க்சிஸ்டுகள் ஒருக்காலும் செய்ய மாட்டார்கள்.மேலும், அமெரிக்காவின் வால் மார்ட்டையும் கொலைகார யூனியன் கார்பைடையும் மேற்கு வங்கத்தில் தொழில் தொடங்க பாக்கு வைத்து அழைக்கும் மார்க்சிஸ்டு கட்சி, அமெரிககாவுக்கு எதிராக அத்து மீறிப் பேச முடியுமா? அதனால்தான் அடக்கி வாசிக்கிறார்கள்.

"முழுவதும் நனைந்த பின் முக்காடு எதற்கு?" என்கிறார் மன்மோகன் சிங். "முக்காட்டை எடுப்பதற்கு மட்டும் நாங்கள் அனும்திக்கவே மாட்டோம்" என்று முழங்குகிறார்கள் மார்க்சிஸ்டுகள் இதுதான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருவருக்கும் உள்ள 'கொள்கை' வேறுபாடு.இன்றைக்கு 'பாஸ்' பொத்தானைத்தான் அமுக்கினோம் என்கிறார் யெச்சூரி.நெருக்கடி எப்ப வந்தது என்று கேட்கிறார்.

இவர்களுடைய வலைப்பதிவர் சந்திப்பு சொல்கிறார்...இந்த ஒப்பந்தமே நாங்கள் எதிர்த்தது (?) காரணமாகத்தான் மக்களுக்கு தெரியவந்துருக்கிறது என்கிறார்.

இது குறித்து தோழர் சந்திப்புக்கு சின்ன கட்டபொம்மன் அவர்கள் போட்ட பதில் பின்னூட்டத்தை கருத்து சுதந்திரம் மிக்க சந்திப்பு அவர்கள் பிரசுரிக்காமல் விட்டதால் அதனை இங்கு இணைத்துள்ளோம்.

தோழர் சந்திப்பு அவர்களே!

அணு சக்தி ஒப்பந்தத்தை மக்களிடம் அம்பலப்படுத்தியதில் இடதுசாரிகள் எனக் கருதிக்கொள்பவர்களின் பங்களிப்பை ஒத்துக்கொள்ளும் முன் ஒரு விசயம்.. இது ஏதோ தனியானதோர் ஒப்பந்தம் போலவும் இதற்கும் அமெரிக்க ராணுவ உடன்பாட்டுக்கும் சம்பந்தமில்லாதது போலவும் தோற்றத்தை உருவாக்குவது ஏன்? 2005இலேயே அமெரிக்காவுடன் உடன்பாடு எட்டப்பட்டு விட்டது..அதன் தொடர்ச்சியாகத்தானே 123?

இதெல்லாம் ஏதோ இன்றைக்குதான் தெரிந்தது போல பாராளுமன்றத்தில் சவடால் அடித்தது தவிர போலிகள் சாதித்தது என்ன?

கடந்த 2 ஆண்டுகளாக இதனை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லாமல் இருந்தது ஏன்?

நாட்டை அடிமையாக்குகிறது இந்த அரசு என்பது தெளிவான பின்னும் ஆதரவை திரும்பப்பெறுவதில் என்ன தயக்கம்? தேர்தலை சந்திக்கத் தயங்குவதுதானே? வங்காள விவசாயிகள் சிந்திய ரத்தம் வரும் தேர்தலில் காவு கேட்டு விடும் எனும் பயமா? காரத்தும், யெச்சூரியும் மாத்தி மாத்தி அடித்த சவடால்கள் கடைசியில் "வாபஸ் பெறுவதைப் பற்றி காங்கிரசு முடிவெடுக்கட்டும்" என்று பிளேட்டையே மாத்திப் போட்டதைப் பார்க்கும்போது, தப்பித்தவறி யெச்சூரியோ, காரத்தோ கோடம்பாக்கம் பக்கம் வந்தார்களென்றால் வடிவேலுவின் மார்க்கெட் சரிந்து விடும் என்பது நிச்சயம்!
10 Comments:

சந்திப்பு said...
கம்யூனிச எதிர்ப்பு அமெரிக்க ஏஜன்டுகளே... இதோ கீழே இருக்கும் அறிக்கையை படியுங்கள்.... இடதுசாரிகள் 2005ஆம் ஆண்டு வெளியிட்ட கூட்டறிக்கை. இந்திய - அமெரிக்க இராணுவ உடன்பாட்டிற்கு எதிரானது. கண்ணை மூடிக் கொண்டு கம்யூனிச அவதூறை பரப்புவதன் மூலம் நீங்கள் உண்மையான கம்யூனிஸ்ட்டுகளாகி விடமுடியாது. காட்டுக்குள்ளே இருப்பவர்களக்கு நாட்டுக்குள் நடப்பது என்ன வென்று புரியாது. அதனால்தான் கல்லை கண்ணாடி வீட்டுக்குள் உட்கார்ந்து கொண்டு எரிகிறீர்கள்.
LEFT PARTIES PROTEST INDO-US AGREEMENT Reject This Framework Of Indo-US Relations: Karat Characterising the new framework for India-US defence relationships as against the security and ...........................................

சின்ன கட்டபொம்மன் said...
..
சந்திப்பு வலைதளத்தில் அணுசக்தி ஒப்பந்தம் சம்பந்தப்பட்ட பதிவிற்கு நான் மறுப்பெழுதி,சந்திப்பு பிரசுரிக்க மறுத்த பின்னூட்டத்தை இங்கே வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
################################
தோழர் சந்திப்பு அவர்களே!
..
அணு சக்தி ஒப்பந்தத்தை மக்களிடம் அம்பலப்படுத்தியதில் இடதுசாரிகள் எனக் கருதிக்கொள்பவர்களின் பங்களிப்பை ஒத்துக்கொள்ளும் முன் ஒரு விசயம்.. இது ஏதோ தனியானதோர் ஒப்பந்தம் போலவும் இதற்கும் அமெரிக்க ராணுவ உடன்பாட்டுக்கும் சம்பந்தமில்லாதது போலவும் தோற்றத்தை உருவாக்குவது ஏன்? 2005இலேயே அமெரிக்காவுடன் உடன்பாடு எட்டப்பட்டு விட்டது..அதன் தொடர்ச்சியாகத்தானே 123?இதெல்லாம் ஏதோ இன்றைக்குதான் தெரிந்தது போல பாராளுமன்றத்தில் சவடால் அடித்தது தவிர போலிகள் சாதித்தது என்ன?கடந்த 2 ஆண்டுகளாக இதனை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்லாமல் இருந்தது ஏன்?நாட்டை அடிமையாக்குகிறது இந்த அரசு என்பது தெளிவான பின்னும் ஆதரவை திரும்பப்பெறுவதில் என்ன தயக்கம்? தேர்தலை சந்திக்கத் தயங்குவதுதானே? வங்காள விவசாயிகள் சிந்திய ரத்தம் வரும் தேர்தலில் காவு கேட்டு விடும் எனும் பயமா? காரத்தும், யெச்சூரியும் மாத்தி மாத்தி அடித்த சவடால்கள் கடைசியில் "வாபஸ் பெறுவதைப் பற்றி காங்கிரசு முடிவெடுக்கட்டும்" என்று பிளேட்டையே மாத்திப் போட்டதைப் பார்க்கும்போது, தப்பித்தவறி யெச்சூரியோ, காரத்தோ கோடம்பாக்கம் பக்கம் வந்தார்களென்றால் வடிவேலுவின் மார்க்கெட் சரிந்து விடும் என்பது நிச்சயம்!###################################

சந்திப்பு...மே.வங்காளத்துல 15 பேரை சுட்டுக் கொன்றதை நியாயப்படுத்தி சென்னை பகுதியில் பலத் தெருமுனை கூட்டங்கள் போட்டு பேசத் தெரியுது.ஆனா நாட்டை அடமானம் வைக்கிற ஒப்பந்தத்தை எதிர்க்குறோம் என்று அறிக்கை மட்டும் விட்டுட்டு பாருங்க என்கிறீர்களே...மக்களிடம் இந்த ஒப்பந்தத்தை அம்பலப்படுத்த விடாமல் தடுத்த சக்தி எது?
4:59 PM
..
கோபா said...
மக்களிடம் இந்த ஒப்பந்தத்தை அம்பலப்படுத்த விடாமல் உங்களை தடுத்த சக்தி எது ?
5:05 PM
சந்திப்பு said...
..
கோபா இந்திய நாடு முழுவதும் கடந்த ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை இந்த விசயத்திற்காக நாடு முழுவதும் தெருமுனைக் கூட்டம் - பிரச்சார இயக்கங்களை நடத்தி வருகிறோம். மேலும் நாளைய தினம் தமிழகத்தில் நடைபெறும் மறியல் இயக்கத்தின் பிரதான கோரிக்கைகளில் ஒன்று இந்த உடன்பாடு. எங்களைப் பொறுத்தவரை தத்துவமும் - நடைமுறையும் இணைந்தே இருக்கும்.
5:33 PM
..
கோபா said...

சந்திப்பு,2 ஆண்டுகளாக 123 ஒப்ப்ந்தத்தை மக்களிடம் அம்பலப்படுத்த என்ன செய்தீர்கள் என்று கேட்டால்; போன வாரம் நாடு முழுவதும் தெருமுனைக் கூட்டம் போட்டோம் என்கிறீர்கள்.அதுதான் தெரிந்ததுதானுங்க, இப்பத்தான் எதிர்க்கிறீரக்ள் அதுகூட சும்மாதான் என்று தானுங்க நாங்க சொல்கிறோம்.
..
நேற்று நிலவரம் தெரியுமா !!
..
காங்கிரசுடன் இடதுசாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை முடிவில் 'கருத்து வேறுபாட்டை போக்க கூட்டுகுழு' அமைக்க முடிவு என்று அறிவித்து உள்ளனர்.அடிமைச் சாசனம் என்று ஒத்துகொள்கிறீர்கள், அதுல திருத்தம் பண்ண 'மண்'மோகனும் சரி அவருடைய பாஸ் புஷ்-ம் சரி ஏத்துக்கிற மாட்டோம் என்று தெளிவுபட சொல்லிட்டாங்க.
..
அதுனால கூட்டுக்குழு- வின் நோக்கம் என்ன?
..
பி.ஜே.பி நேற்றே சொல்லிட்டார்கள் 'நாங்க 123 யை எதிர்க்க மாட்டோம்' என்று.
..
உங்களால் அப்படி நேரடியாக சொல்ல முடியாது என்பதால் கூட்டுகுழு, அது, இது என்று பசப்புகிறீர்கள்.
9:14 AM

பாவெல் said...
தோழர் கட்டபொம்மன்எதுக்கு இந்த 'சந்திப்பு' கோமாளிக்கு 'தோழர்'என்ற மதிப்புக்குறிய வார்த்தைகளையெல்லாம்பயன் படுத்துகிறீர்கள்?
சந்திப்பு ஒரு கூலிக்குமாரடிக்கும் "அப்பாவி"அவருக்கு டாடாஸ்டுகளின்நிலைபாடுகளை கூட சரியாகவிளக்கி பேசத் தெரியாது,கேட்டு தான் சொல்வார்.CPM கட்சியில் உள்ள உண்மையானதொன்டனுடைய உணர்வை,அந்த தலமையின் துரோகத்தனத்தைஅறியாத 'தோழர்களின்' உணர்வை நாம்சந்திப்பிடம் எதிர்பார்க்க கூடாது.ஏனெனில் சந்திப்பு CPM என்கிற தனியார்நிறுவனத்தில் "தொழிலாளி"யாக பணிபுரிகிறார்.எனவே அவருக்கு தெரிந்த "அமெரிக்க ஏஜென்ட், காடு,துப்பாக்கி, நக்சலைட்" போன்ற வார்த்தகளை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருப்பார் அப்ப தானே அவருக்கு"கூலி" கிடைக்கும்.எனவே நான் சொல்ல வருவது என்ன என்றால்,அண்ணன் சந்திப்புக்கு நாம் புரிய வைப்பதற்குஒன்றுமே இல்லை என்பது தான் !
..
ஏம்பா சந்திப்பு நீம் பாட்டுக்கு ஏன் தத்துவம், நடைமுறைன்னெல்லாம்பேசிக்கிட்டிருக்க,இதெல்லாம் உனக்கே ரொம்ப ஓவரா தெரியல ?
10:00 PM

அமெரிக்க அடிமை நாய் மன்மோகன் வழங்கும் 123 அல்லது அடிமை சாசனம் !!

1945 ஆம் வருடம் ஆகஸ்ட் 6 ஆம் தேதி ஹிரோஷிமா நகரின் மீது அணுகுண்டு வீசி 70,000 மக்களைக் கொன்று குவித்ததுடன் இன்றுவரை அங்கே பிறக்கும் குழந்தைகள் ஊனமுற்றவர்களாகப் பிறக்கும் அளவுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தியது அமெரிக்கா. அதற்கு 3 நாட்களுக்குப் பிறகு இன்னொரு ஜப்பானிய நகரமான நாகசாகியில் தனது கொலைவெறியை அரங்கேற்றி 74,000 மக்களைக் கொன்று குவித்தது.

மனித குலத்தையே வேரறுக்கக் கூடிய இந்த அணு ஆயுதத்தை முதன்முதலில் மனிதன் மீது பிரயோகித்த பெருமையைத் தன்னுடைய தாக்கிக் கொண்டாலும், அந்த அணுசக்தியிலிருந்து பலன் பெற்று மின்சாரம் தயாரிக்கும் வழிமுறை அமெரிக்காவிடம் இல்லை. சோவியத் ரஷ்யாவில்தான் 1954 ஆம் ஆண்டு முதன் முதலில் அணுசக்தியிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்பட்டது. ஆனால் அதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, 1951 ல் இருந்தே இந்தியாவில் அணுசக்தி குறித்த ஆராய்ச்சிகளையும், அணு உலைகளை அமைத்து அணுசக்தியை மக்கள் நலனுக்குப் பயன்படுத்துவது பற்றியும் இந்திய அணுசக்தித் துறையின் தந்தை என அழைக்கப்படும் ஹோமி பாபா திட்டமிட்டு செயல்படுத்தியுள்ளார்.

அப்போதிருந்தே உலக அளவில் அணுசக்தித் துறையில் மற்ற நாடுகளுடன் இந்தியா போட்டி போட்டு வளர்ந்து வருகிறது. இன்றளவும் அதிவேக ஈனுலைகள் என்ற அணுசக்தித் தொழில்நுட்பத்தில் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது. தோரியம் எனும் தனிமத்தைக் கொண்டு இயங்கக் கூடிய இந்த "அதிவேக ஈனுலைகள்" யுரேனியம் கொண்டு இயங்கும் மற்ற நாட்டு அணு உலைகளை விட 600 மடங்கு அதிக சக்தியைக் கொண்டது என்று முன்னாள் இந்திய அணுசக்தித்துறைத் தலைவர் சிதம்பரம் கூறியுள்ளார்.

இது மட்டுமின்றி வேறெந்த நாட்டின் உதவியுமின்றி சொந்தநாட்டிலேயே தயாரித்து, இதுவரை இரண்டு முறை அணு குண்டு வெடித்துச் சோதனை நடத்தியுள்ளது இந்தியா.இவ்வாறு மின்சாரத் தேவைக்கான அணுசக்தி ஆராய்ச்சி தொடங்கி, பக்கத்து நாடுகளை மிரட்டி அணுகுண்டு வெடிப்பது வரை இந்தத் துறையில் சொந்தத் தொழில்நுட்பத்தையே இந்தியா பயன்படுத்தி வந்துள்ளது.

ரஷ்யாவின் உதவியுடன் கல்பாக்கத்திலும், அமெரிக்காவின் உதவியுடன் தாராப்பூரிலும் அணுமின் நிலையங்களை நிறுவினாலும் அவை முற்றிலும் இந்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவையாகவே இருந்துள்ளன.

..ஆனால் இப்போது '123 ஒப்பந்தம்' என்ற பெயரில் அமெரிக்காவுடன் இந்தியா செய்துள்ள அணுசக்தி ஒப்பந்தம் இந்தியாவின் இறையாண்மைக்கு ஆப்பறையும் விதத்தில் வந்துள்ளது.

இந்த ஒப்பந்ததின்படி அடுத்த 40 ஆண்டுகளுக்குத் இந்தியா அமெரிக்காவிடமிருந்து யுரேனியத்தை இறக்குமதி செய்து கொள்ளும். அப்படி இறக்குமதி செய்யும் யுரேனியத்தைக் கொண்டு மின்சாரம் மட்டுமே தயாரிக்க வேண்டும், அணுகுண்டு தயாரிக்கக் கூடாது. மீறி அணுகுண்டு தயாரித்தால் அமெரிக்கா கொடுத்த யுரேனியத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளும். இந்த யுரேனியத்தை நம்பி இந்தியா பல லட்சம் கோடி செலவில் அணு உலைகளை உருவாக்கியிருந்தாலும் அது பற்றி அவர்களுக்குக் கவலையில்லை. அணுகுண்டு வெடிக்காவிட்டாலும் அமெரிக்காவின் அனைத்து ராணுவ நடவடிக்கைகளுக்கும், வெளிநாட்டுக் கொள்கைகளுக்கும் இந்தியா ஒத்துழைப்புத் தரவேண்டும்.

ஏற்கனவே இரண்டு முறை ஈரான் -க்கு எதிராக ஐ.நா வில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்துக்கு இந்தியா வாக்களித்து உள்ளது.

இப்போது ஈரானை தாக்க அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது. அவ்வாறு தாக்குதல் தொடுக்குமானால் அப்போது இந்தியா கூலிப்படை அனுப்பி உதவ வேண்டும்.

அதேபோல மற்ற நாடுகள் அனுமதிக்காத 'நிமிட்ஸ்' போர்க் கப்பலை இந்தியக் கடலோரத்தில் இந்தியா அனுமதித்து உள்ளது. அந்த கப்பல் போர்க்கழிவுகளை கொட்டிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இதேபோல எதிர்காலத்திலும் இதுபோன்ற கப்பல்களை தங்கு தடையின்றி வந்து போக அனுமதிக்க அமெரிக்கா நிர்பந்திக்கிறது.

அணு ஆராய்ச்சியை இந்திய விஞ்ஞானிகளைக் கொண்டு, குறைந்த விலைக்கு நடத்தித் தர அமெரிக்கா கோருகிறது.அணு உலைகளை கண்காணிக்க நிபுணர்குழுவினை இந்தியாவுக்குள் வந்து போக அணுமதிக்க வேண்டும் என்று நிர்பந்திக்கிறது..

இப்படிப்பட்ட நாசகார, மோசடியான ஒப்பந்தத்தை தாய்நாட்டின் மீது பற்றுக் கொண்ட யாரும் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்கள்.

ஆனால் அமெரிக்க அடிமை நாயாய் சேவகம் செய்யும் மன்மோகன் சிங் இதனை ஏற்று கொண்டுவிட்டார். மக்களையே சந்திக்காமல், தேர்தலிலேயே நிற்காமல் இந்த நாட்டின் பிரதம மந்திரியாய் உட்கார்ந்து கொண்டு இப்படி தாய்நாட்டை அமெரிக்காவுக்கு விலை பேசியுள்ளார்.

"நீ என்ன வேண்டுமானாலும் கூறிக்கொள், உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள். ஆனால் ஒப்பந்தத்தை திரும்ப பெற முடியாது. குறைந்த பட்சம் இது குறித்து விவாதம் செய்ய முடியாது." என்று மன்மோகன் சிங் கூறிகிறார்.

அமெரிக்க எஜமானன் போட்ட உத்தரவை இந்திய அடிமைகள் பரிசீலிப்பதா என்று இவர் விடும் அறிக்கைகளைப் படிக்கும் போது சிறிதளவேனும் தேசப்பற்றுடைய எவருக்கும் ரத்தம் கொதித்துப் போகும்.

இதையெல்லாம் விட்டுவிட்டு அணு குண்டு வெடிக்க முடியாது என்று கூறி இதனை எதிர்க்கிறது பா.ஜ.க. இந்த தேசவிரோத ஒப்பந்தம் நிறைவேறனுமா, வேண்டாமா என்று இவர்கள் கூறுவதில்லை. என்ன செய்ய முடியும், காங்கிரஸ் அல்சேஷன் என்றால் பா.ஜ.க டாபர்மேன் இல்லையா?

இந்த ஒப்பந்தத்தை குறித்த பேச்சுவார்த்தையை ஆரம்பித்துவைத்ததே வாஜ்பாயிதான் என்று குட்டை உடைத்துவிட்டார் எம்.கே.நாராயணன் (இந்திய பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்) அத்தோடு இவர்களின் குலைக்கும் சத்தம் ஓய்ந்துவிட்டது.

"ஒப்பந்ததை ரத்து செய்யாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டிய போலிக் கம்யூனிஸ்டுகளைப் பார்த்து" மன்மோகன் சிங் "உங்களால் என்ன செய்ய முடியும், ஆட்சிக்கு ஆதரவை வாபஸ் வாங்கிக் கொள்வீர்கள்; வாங்கிக் கொள்ளுங்கள்" என்று கூறிவிட்டார்.

எனது எஜமானனுக்குச் சேவை செய்ய முடியாத ஆட்சி இருந்தாலென்ன போனால் என்ன கருதுகிறார் போலும்.

இந்தப் பிரதமர் பதவி அமெரிக்கா எனக்குப் போட்ட பிச்சை, 123 ஒப்பந்தத்திற்காக அதனை இழக்கவும் நான் தயங்கமாட்டேன் என்று கூறிய உடன் போலிக் கம்யூனிஸ்டுகளுக்கு பா.ஜ.க வின் மதவெறி நினைவுக்கு வர ஆட்சியையெல்லாம் கவிழ்க்க மாட்டோம் சும்மா இது பற்றி விவாதம் மட்டும் பண்ணினால் போதும், ஓட்டெடுப்பு கூட வேண்டாம் என்று இறங்கிவந்தார்கள்.

ஆனால் மன்மோகன் சிங்கோ தான் பிடித்த அமெரிக்க உச்சாணிக் கொம்பில் நின்று கொண்டு சிறிது கூட இறங்காமல் உனக்கும் பெப்பே உங்கப்பனுக்கும் பெப்பே என விவாதம்கூட செய்ய முடியாது என்று கூறிவிட்டார்.

உடனே 'தோழர்கள்' கடுமையான விளைவுகள் நேரிடும் என்று திரும்பவும் லாவணிபாட ஆரம்பித்து விட்டனர்.

கடந்த 100 ஆண்டுகளில் 50க்கும் மேற்பட்ட போர்களில் ஈடுபட்டு, உலகம் முழுவதிலும் பல லட்சம் மக்களைக் கொன்று குவித்த ஒரு ரத்தவெறி பிடித்த ஏகாதிபத்திய மிருகம் அமெரிக்கா. அதன் காலடியில் நமது நாட்டை,அதன் இறையாண்மையை, நமது எதிர்காலத்தை, மற்ற நாடுகளுடன் நமது உறவை அடமானம் வைக்கும் அடிமைச்சாசனம்தான் 123 ஒப்பந்தம்.

இந்த உண்மை எல்லா அரசியல்வாதிக்கும் தெரியும்.
நன்றி:கோபா

Sunday, September 2, 2007

அணுசக்தி ஒப்பந்தம்:அம்மணமானது 'தேசியம்' !

நன்றி: "புதிய ஜனநாயகம்" செப் 2007





அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் ! அடிமை அடியாள் அணுசக்தி !!

அடிமையாக மாட்டோம்,அடியாளாக மாட்டோம் !

மறுகாலனியாக்கம் என்ற படுகுழிக்குள் இந்தியாவைத் தள்ளிய காட் ஒப்பந்தமும் இப்படித்தான் நம் மீது திணிக்கப்பட்டது, 1994-இல் அமைச்சரவைக்கும் நாடாளுமன்றத்துக்கும் தெரியாமல் ஒரு அதிகாரிகள் குழுதான் அதிலும் கையெழுத்திட்டது. பிறகு நாடாளுமன்றம் அதற்குத் தலையாட்டியது. அந்த மறுகாலனியாக்கம்தான் இன்று நாள் தோறும் மக்களை மரணக்குழியில் தள்ளி வருகிறது.

மறுகாலனியாதிக்க அடிமைத்தத்தின் கோரமான உச்சக் கட்டம்தான் இந்த அனுசக்தி ஒப்பந்தமும் இந்திய அமெரிக்க இராணுவ ஒப்பந்தமும்! மறுகாலனியாதிக்கக் கொள்கை பொதுத்துறைகளைப் பன்னாட்டு முதலாளிகளுக்குத் தாரைவார்த்திருக்கிறது. விளைநிலங்களைப் பிடுங்கி பன்னாட்டு முதலாளிகளுக்குப் பட்டா போட்டுக் கொடுத்திருக்கிறது. விவசாயிகளைத் தற்கொலைக்குத் தள்ளியிருக்கிறது. இப்போது அது நம்முடைய மானத்தையும், பெயரளவு இறையாண்மையையும் கூடத் காவு கேட்கிறது. ஆக்கிரமிப்பு வெறி பிடித்த அமெரிக்க வல்லரசுக்கு நம்மையும் நம் நாட்டையும் அடியாளாக மாறச் சொல்கிறது. இதை நாம் அனுமதிக்கப் போகிறோமா? இந்த அவமானத்தைச் சகித்துச் கொள்ளப் போகிறோமா?

நாட்டுபற்றும் தன்மான உணர்ச்சியும் கொண்ட ஒவ்வொரு வரும் சிந்திக்க வேண்டும். இந்தத் துரோக ஒப்பந்தத்தை முறியடிக்கக் களத்தில் இறங்க வேண்டும்.

அணுசக்தி ஒப்பந்தத்தைத் தூக்கியெறிவோம்!

அமெரிக்க - இந்திய இராணுவ ஒப்பந்தத்தை கிழித்தெறிவோம்!

அமெரிக்க மேலாதிக்க எதிர்ப்பின் ஆசியத்தளமாக இந்தியாவை மாற்றியமைப்போம்!

- வெளியீட்டில் இருந்து
..
தொடர்புக்கு:
.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
110/63,என்.எஸ்.கே சாலை,
கோடம்பாக்கம்,
சென்னை-600 024போன்:94448 34519

பிரதிகள் கிடைக்குமிடம்:.
இரா.சீனிவாசன்
புதிய கலாச்சாரம்
16,முல்லைநகர் வணிக வளாகம்,
2-வது நிழற்சாலை,
அசோக் நகர்,
சென்னை - 600 083
..
நன்கொடை ரூ 5/-
..

அமெரிக்க விசுவாசமே அடிமையின் சுவாசம்!

அக்டோபர் 9ஆம் நாள், ஹவதேரி என்ற இடத்தில் வடகொரியா வெற்றிகரமாக அணுசக்தி சோதனையை நடத்தியது. அச்செயல் கிழக்கு ஆசியாவின் அமைதிக்கும் உறுதிப்பாட்டுக்கும் பேராபத்தானது என்றும் கடும் கண்டனத்துக்குரிய இரகசியமான அணு ஆயுதப் பரவல் என்றும் முதன்முதலாகக் குரலெழுப்பிய நாடு இந்தியாதான். அதைத் தொடர்ந்து வடகொரியாவின் அண்டை நாடுகளும், உலகின் அணு ஆயுத வல்லரசுகளும் அதை அப்பட்டமான, மிக மோசமான ஆத்திரமூட்டும் செயல் என்று வன்மையாகச் சாடின. உடனடியாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழு வடகொரியாவுக்கு எதிராக பல தடைகளை விதித்து, உலக வல்லரசுகளின் முன்பு மண்டியிடும்படி உத்திரவு போட்டது. வடகொரியா அதை ஏற்கவில்லை என்பது வேறு விசயம்.
..
ஆனால், இப்போது அணுசக்தி சோதனை நடத்தியதற்காக வடகொரியாவிற்கு எதிராக முதலில் தனது கடும் எதிர்ப்பைக் காட்டியது இந்தியாதான்; 1974இல் முதன்முறையாகவும் 1998இல் மீண்டும் அணுசக்தி சோதனை நடத்தியதன் மூலம் நீண்ட காலத்துக்குப் பிறகு அணு ஆயுதப் பரவலுக்குக் காரணமாக இருந்தது இந்தியாதான்; ஆனால், ""இந்தியாவோடு வடகொரியாவை ஒப்பிடவே கூடாது, இரண்டும் வேறு வேறு வகையான செய்கைகள்'' என்று மூர்க்கமாக வாதிடும் இந்தியா,
""இரகசியமான அணு ஆயுதப்பரவல்'' என்று சாடுகிறது. அதாவது, வடகொரியா தனது அணுசக்தி சோதனை முழுக்க முழுக்க தனது சொந்தத் தொழில்நுட்ப அடிப்படையிலானது என்று கூறியபோதிலும், அது பாகிஸ்தானுடன் கூட்டுச் சேர்ந்து நடத்தியது என்று சாதிக்கிறது, இந்தியா.
..
பாகிஸ்தானைவிட எல்லா இராணுவத் துறைகளிலும் வலிமையான நாடு இந்தியா என்று மூன்று போர்களில் இந்தியாவின் மேலாண்மை நிரூபிக்கப்பட்டு விட்டது. இருந்தபோதும் பாகிஸ்தானை உருட்டி மிரட்டிப் பணிய வைக்கவும், தெற்காசியாவில் தனது பிராந்தியத் துணை வல்லரசு மேலாதிக்க விரிவாக்க நலன்களுக்காகவும் இந்தியா மீண்டும் மீண்டும் அணுசக்தி சோதனைகளை நடத்தியது. ஆனால், இந்தியாவின் இந்தச் செயல், உடனடியாகவே பாகிஸ்தானையும் அணுசக்திச் சோதனையிலும் இரண்டு நாடுகளும் மேலும் மேலும் ஆயுதக் குவிப்பு போட்டியிலும் ஈடுபடவே வழிவகுத்தன.
..
இப்போது இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளுமே அணு ஆயுத முனைகளைக் கொண்ட ஏவுகணை சோதனைகளும் உற்பத்திகளும் செய்வதில் ஒருவரை ஒருவர் விஞ்சுவதற்கான போட்டியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. தெற்கு ஆசிய அமைதிக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளின் அணு ஆயுதஏவுகணை சோதனைகளுக்கும் உற்பத்திக்கும் எவ்வித நியாயமான காரணங்களும் இல்லாத அதேசமயம், இவ்விரு நாடுகளின் எஜமானனாகவும் அணு ஆயுத மேல்நிலை வல்லரசாகவும் உள்ள அமெரிக்காவின் மேலாதிக்கப் போர்வெறிதான், வடகொரியாவின் அணு ஆயுத ஏவுகணை சோதனை மற்றும் உற்பத்தி முயற்சிகளுக்கு மூலகாரணமாகவும் தூண்டுதலாகவும் இருக்கிறது.
..
கம்யூனிச சீனா மற்றும் ரசிய சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தின் அணு ஆயுதக் கவசத்தின் கீழ் இருந்தவரை வடகொரியா அணு ஆயுதத் தயாரிப்பு முயற்சிகளில் இறங்கவில்லை. சீனாவில் முதலாளியம் நிலைநாட்டப்பட்ட பிறகு, அமெரிக்காவுடனான பனிப்போரில் சோவியத் ஒன்றியம் தோற்றுப்போன பிறகு, அமெரிக்காவுடன் சமரசம் செய்து கொண்ட வடகொரியா, 1985இல் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது. 1992இல் சர்வதேச அணுசக்தி முகமையோடு ஒரு பாதுகாப்பு ஒப்பந்தம் போட்டது. இதற்குக் காரணம் ஜப்பானிலும், கொரிய வளைகுடாவிலும் அமெரிக்கா குவித்து வைத்திருக்கும் அணு ஆயுதங்களை விலக்கிக் கொள்வதாக வாக்களித்தது. ஆனால் அமெரிக்கா அவ்வாறு செய்யாததோடு, வடகொரியாவில் உள்ள அணு ஆயுதம் அல்லாத வசதிகளையும் மேற்பார்வையிட வேண்டும் என்று நிர்பந்தித்து, ஆப்ஃகான், ஈராக்கோடு வடகொரியாவையும் சேர்த்து ""சாத்தான்களின் அச்சு நாடுகள்'' என்று அறிவித்தது. அமெரிக்காவின் ஆட்சி மாற்றத் திட்டத்துக்கான இலக்குகளில் ஒன்றாக வடகொரியாவை வைத்தது.
..
கொசாவோ, ஆப்ஃகான், ஈராக் என்று அடுத்தடுத்து பாசிச ஆக்கிரமிப்புப் போர்களை அமெரிக்கா தொடுத்ததோடு, வடகொரியாவும் அதன் தாக்குதலுக்கு இலக்காகும் என்று அச்சுறுத்தப்பட்டது. இந்த நிலையில் 2003ஆம் ஆண்டே அணு ஆயுதப்பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிய வடகொரியா, அணு ஆயுத சோதனைகளைத் தொடர்ந்து நடத்தி வெற்றியும் கண்டுள்ளது.
..
""அணு ஆயுதப் போரில் வெல்லும் ஆற்றல் பெற்றிராத எந்தவொரு நாட்டு மக்களும் ஒரு சோகமான சாவையே எதிர்கொள்ள வேண்டி வரும்; அந்த நாட்டின் இறையாண்மை வெட்டிச் சிதைக்கப்படும். இது உலகின் பல்வேறு நாடுகளுக்கும், அமெரிக்காவின் காட்டாட்சி இரத்தம் சிந்தி புகட்டியுள்ள கசப்பான அனுபவம்'' என்று தமது அணு ஆயுதச் சோதனையை ஆறு நாட்களுக்கு முன்பே அறிவித்த வடகொரிய அயலுறவுத்துறை அமைச்சர் கூறினார். இது அமெரிக்க விசுவாசிகளான மன்மோகன் சிங்குகள் மறுக்க முடியாத அப்பட்டமான உண்மை நிலையாகும்.
..
அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தின்படியே கூட, ஒரு நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் மோசமான அச்சுறுத்தல் வரும்போது, அந்த நாடு அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபடுவதற்குத் தடையில்லை. அதன் 10வது பிரிவின்படி, ""தனது நாட்டின் அதீத நலன்களுக்குக் குந்தகம் ஏற்படும் எனில், இந்த ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தோடு தொடர்புடைய மிகமிக முக்கியமான நிகழ்வுகள் நடந்துவிட்டதாக கருதினால், எந்தவொரு நாடும் தனது தேசிய இறையாண்மையைப் பயன்படுத்தி இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொள்ளலாம். ஒப்பந்த நாடுகளுக்கும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புக் கவுன்சிலுக்கும் மூன்று மாதங்கள் முன்னதாக அந்த நாடு தனது விலகலைக் குறித்துத் தெரிவிக்க வேண்டும்.'' இங்கே குறிப்பிடப்படும் வகையிலான பேராபத்தை எதிர் கொண்டுள்ள வடகொரியா, மூன்றாண்டுகளுக்கு முன்னதாகவே அறிவித்து, அந்த தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகி விட்டது.
..
ஆனால், வடகொரியாவைப் போன்றதொரு ஆபத்து எதுவும் இல்லாத இந்தியா, அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தையே ஏற்காத இந்தியா, 30 ஆண்டுகளுக்கு முன்பே அணு ஆயுதப் பரவலுக்குக் காரணமாக இருந்த இந்தியா, வடகொரியாவின் மிகவும் அவசியமான தற்காப்பு முயற்சியை கடுமையாகக் கண்டிக்கிறது. வடகொரியாவைப் போலவே, அமெரிக்க பாசிச ஆக்கிரமிப்புப் போர் அச்சுறுத்தலுக்கு இலக்காகியுள்ள ஈரானுக்கு எதிராக சர்வதேச அணுசக்தி முகாமையில் இந்தியா ஓட்டளித்திருக்கிறது. அதன்மூலம் அமெரிக்கா, ஈரானை உருட்டி மிரட்டவும் ஆக்கிரமிப்புப் போர்தொடுக்க சாக்குப் போக்குச் சொல்வதற்கும் துணை புரிந்திருக்கிறது. இதன் விளைவாக, ஈரானுடனான இந்தியாவுக்கான தரை வழி எண்ணெய்க் குழாய் திட்டம் முறிந்து போனபோதும், அமெரிக்க விசுவாசமே முக்கியமானது என்று கருதி அதன் நிர்பந்தத்துக்குப் பணிந்து போயுள்ளது.
..
அக்.9 அணு ஆயுத சோதனையின் மூலம், உலகின் அணு ஆயுத "வல்லரசு' நாடாகியிருக்கும் வடகொரியா, அந்த வரிசையில் எட்டாவது நாடுதான். ஏற்கெனவே, ஏழு நாடுகள் அணு ஆயுதங்களையும் ஏவுகணைகளையும் செய்து குவித்து வைத்திருக்கின்றன. இவை தவிர இருபது நாடுகளில் அணு ஆயுதங்களையும் ஏவுகணைகளையும் அமெரிக்கா நிறுத்தி வைத்திருக்கிறது. உலகின் பெருங்கடல்வழித் தடங்களில் கூட அமெரிக்கப் போர்க் கப்பல்கள் அணு ஆயுதங்களையும் ஏவுகணைகளையும் ஏராளமாகச் சுமந்து திரிகின்றன. அணு ஆயுதங்களையும் ஏவுகணைகளையும் முற்றாக ஒழிப்பதற்கான வழிவகையின்றி, அணு ஆயுதப் பரவலுக்கு எதிராக வெறுங்கூச்சல் போடுவது, சாத்தான் வேதம் ஓதுவதைப் போன்றது; பாசிசப் போர் வெறிபிடித்த அமெரிக்காவுக்குத் துணை போவதுதான்.
..
எண்பதற்கும் மேலான அமெரிக்க சி.ஐ.ஏ.வின் படுகொலை முயற்சிகளைக் கண்டும் அஞ்சாத, எண்பது வயதுக்கும் மேலான கிழவன் ஃபிடல் கேஸ்ட்ரோவும், அமெரிக்காவின் வாசலில் நின்று கொண்டு அதன் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷûக்கு சவால் விடும் வெனிசுலா அதிபர் சாவேசிடம் தெரியும் நெஞ்சுரம் கண்டு உலகமே வியக்கிறது.
..
ஆனால், இந்தியப் பிரதமர் மன்மோகனின் கோழைத்தனமும் துரோகத்தனமும் கண்டு உலகமே கைகொட்டிச் சிரிக்கிறது. ஈரானுக்கு எதிராக வாக்களிக்கும்படி அமெரிக்க அயலுறவுச் செயலர் கண்டலிசா ரைஸ் உத்தரவு போடுகிறார். ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழு உறுப்பினர் தேர்தலில் வெனிசுலாவுக்கு எதிராக வாக்களிக்கும்படி அதிபர் புஷ் தொலைபேசியில் கூப்பிட்டு மிரட்டுகிறார். மன்மோகன் சிங்கோ தண்டனிட்டு தலைமேற்கொண்டு செய்து முடிக்கிறார். மும்பை குண்டு வெடிப்பில் பாகிஸ்தான் உளவு நிறுவனத்தின் பங்கு குறித்த ஆதாரங்களை அமெரிக்க அதிகாரிகளின் காலடியில் சமர்ப்பிக்கிறது, இந்தியா ஏதோ அமெரிக்க சி.ஐ.ஏ.வுக்குத் தெரியாத இரகசியம் போல!
..
எல்லாம் அமெரிக்காவுடனான இந்தியாவின் இராணுவ ஆயுத ஒப்பந்தங்களை குறிப்பாக, அணுசக்தி ஒப்பந்தத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காகத்தான் என்று மன்மோகன் சிங்கும் அவரது கோயபல்சுகளும் பிரச்சாரம் செய்கின்றனர். இந்தியாவின் இந்த ஒப்பந்தமே எவ்வளவு துரோகத்தனமானதென்று இந்திய அணுசக்தி அறிஞர்களே கடும் எதிர்ப்பைக் காட்டியுள்ளனர்; அமெரிக்க செனட் மற்றும் பிரதிநிதிகள் சபையின் திருத்தங்களே அதை பறைசாற்றுகின்றன (பார்க்க ஆக. 2006 புதிய ஜனநாயகம் தலையங்கம்). சரியாகச் சொல்வதானால், செத்துப் பிறந்த குழந்தையான இந்திய இறையாண்மைக்கு ""திவசம்'' கொடுக்கும் புரோகிதர் வேலையைத்தான் மன்மோகன் சிங் செய்து கொண்டிருக்கிறார்.
..

இந்திய – அமெரிக்க ஆணுசக்தி ஒப்பந்தம்: அமெரிக்க அடிவருடிகளின் அரிதாரம் கலைந்தது

இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம் குறித்த அறிக்கை கையெழுத்தான நாளில் இருந்தே, அதனை அடிமைச் சாசனம் என அம்பலப்படுத்தி, நாம் எழுதி வருகிறோம். அதேசமயம், அமெரிக்க அடிவருடிகள் அனைவரும், ""அமெரிக்கா, இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவை வல்லரசாக்கப் போவதாக''க் கூறி, இந்திய மக்களின் காதுகளில் பூ சுற்றி வந்தார்கள். இந்தக் கெட்டிக்காரர்களின் குட்டை, இன்று அமெரிக்காவே புட்டு வைத்து விட்டது.

இந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னிபந்தனையாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் இந்தியா அமைதிக்கான அணுசக்தி கூட்டுறவுச் சட்டம், ""இந்தியா எவ்வளவு யுரேனியத்தைக் கையிருப்பில் வைத்திருக்கலாம் என்பதில் தொடங்கி இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை எப்படி இருக்க வேண்டும் என்பது முடிய அனைத்தையும் தீர்மானிக்கும் உரிமை இனி இந்திய நாடாளுமன்றத்திற்குக் கிடையாது; அமெரிக்க நாடாளுமன்றத்திற்குத் தான் உண்டு'' எனப் பச்சையாகக் குறிப்பிட்டுள்ளது.

காலனிய ஆட்சி காலத்தில் மாட்சிமை தங்கிய பிரிட்டிஷ் மகாராணியின் கீழ் காலனிய இந்திய அரசு செயல்பட்டதைப் போல, இப்பொழுது, அமெரிக்க நாடாளுமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் "சுதந்திர' இந்திய அரசு செயல்பட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

இந்திய நாடாளுமன்றத்துக்குக் கூடத் தெரிவிக்காமல், அமெரிக்காவில் வைத்துதான் கடந்த ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் குறித்த அறிக்கையில் மன்மோகன் சிங் கையெழுத்துப் போட்டார். இந்த அறிக்கை கையெழுத்தாகி (ஜூலை, 2005) ஒன்பது மாதங்கள் கழித்து அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மார்ச் 2006இல் இந்தியாவிற்கு வந்தபொழுது, அணுசக்தி ஒப்பந்தம் குறித்த கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அப்பொழுதுதான், ""இந்தியாவில் உள்ள அணு உலைகளை, சிவில் அணு உலைகள், இராணுவ அணு உலைகள் என இரண்டாகப் பிரிக்க வேண்டும்; சிவில் அணு உலைகளை சர்வதேச அணுசக்தி முகாமையின் கண்காணிப்புக்கு உட்படுத்த இந்தியா முன்வர வேண்டும்; அணுகுண்டுகள் தயாரிக்கத் தேவைப்படும் யுரேனிய வகைகளை உற்பத்தி செய்வதைத் தடை செய்யும் பல்நாட்டு கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்'' என்பன உள்ளிட்டு, அமெரிக்கா விதித்த பல்வேறு நிபந்தனைகளை இந்திய அரசு ஏற்றுக் கொண்டிருப்பது மறுக்க வழியின்றி அம்பலமானது. இதன் பிறகுதான், இந்திய அணு விஞ்ஞானிகள் உள்ளிட்டு பல்வேறு தரப்பினரும் இந்த ஒப்பந்தத்தை எதிர்க்கத் தொடங்கினர்.
இந்த ஒப்பந்தத்தை எதிர்ப்பவர்களைச் சமாதானப்படுத்தும் முகமாக, மன்மோகன் சிங் நாடாளுமன்றக் கூட்டத்திலேயே சில வாக்குறுதிகளைக் கொடுத்தார்; அணுசக்தி விஞ்ஞானிகளையும் நேரடியாகச் சந்தித்துப் பேசியதோடு, இந்த ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றும் வரை பொறுமையாக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்தார். ""ஹைட் சட்டம்'' எனச் சுருக்கமாக அழைக்கப்படும் இந்த அமெரிக்கச் சட்டமோ, மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தின் மூலம் நாட்டு மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் குப்பைக் கூடைக்குள் வீசியெறிந்து விட்டது.
···
""சமூகப் பயன்பாட்டுக்கான அணு ஆற்றல் தொடர்பாக இந்தியா மீது விதிக்கப்பட்டுள்ள அனைத்துத் தடைகளையும் நீக்க வேண்டும்; சிவில் அணு உலைகளில் பயன்படுத்தப்படும் எரிபொருளைச் செறிவூட்டுவது; கனநீரை உற்பத்தி செய்வது உள்ளிட்ட உரிமைகளை இந்தியாவிற்குத் தருவதோடு, அவற்றுக்கான தொழில்நுட்பத்தையும்; சாதனங்களையும் பெறும் உரிமை இந்தியாவிற்கு வழங்கப்பட வேண்டும்; சிவில் அணு ஆற்றல் தொடர்பாக மேலை நாடுகள் அனுபவிக்கும் அதே உரிமைகள் இந்தியாவிற்கும் கிடைக்கும் என்ற வாக்குறுதியை அமெரிக்கா வழங்க வேண்டும்'' இது, பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் அளித்த வாக்குறுதிகளுள் ஒன்று.

அணு உலைகளில் பயன்படுத்தப்படும் எரிபொருளான யுரேனியத்தைச் செறிவூட்டவும், மீண்டும் புத்தாக்கம் செய்யவும் பயன்படும் தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் ஏற்கெனவே தன்னிறைவு அடைந்துள்ள இந்தியா, இந்த ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்காவில் இருந்து முன்னேறிய தொழில் நுட்பத்தை இறக்குமதி செய்து கொள்ளலாம் என எதிர்பார்த்திருந்தது. குறிப்பாக, உள்நாட்டில் வெட்டி எடுக்கப்படும் யுரேனியம் இந்தியாவின் தேவைகளை ஈடு செய்ய முடியாமல் பற்றாக்குறையாக இருப்பதால், இந்த ஒப்பந்தத்தின் மூலம் இறக்குமதி செய்யப்படும் யுரேனியத்தை எரிபொருளாகப் பயன்படுத்தியபிறகு, அதனை இந்தியாவிலேயே செறிவூட்டிக் கொள்ளும் உரிமையும் கிடைக்கும் என இந்திய அரசு எதிர்பார்த்தது.

ஆனால், அமெரிக்கச் சட்டமோ, இந்த உரிமைகளையும், இதற்கான தொழில்நுட்பத்தையும் இந்தியாவிற்கு வழங்கக் கூடாது எனத் தடை விதித்திருக்கிறது. மேலும், அமெரிக்கா உள்ளிட்டு 45 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டுள்ள அணுஆற்றல் வழங்குவோர் குழுமம், இந்த உரிமையை தொழில்நுட்பத்தை இந்தியாவிற்கு இறக்குமதி செய்து விடாமல் அமெரிக்கா பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்தியா அமெரிக்கா இடையே அணு ஆற்றல் கூட்டுறவு தொடர்பாகப் பேச்சு வார்த்தை தொடங்கிய பொழுது, இந்தியா, ""தனது சிவில் அணு உலைகளை, தனது விருப்பப்படிதான் சர்வதேச அணு ஆற்றல் கமிசனின் கண்காணிப்புக்கு உட்படுத்தும்'' எனக் கூறியதாகவும், அதன் பின்னர்தான் தனது நிலையை மாற்றிக் கொண்டு, ""தனது சிவில் அணு உலைகளை, அவற்றின் ஆயுட்காலம் முழுவதும் எவ்வித நிபந்தனையும் இன்றி சர்வதேச அணு சக்தி முகாமையின் கண்காணிப்புக்கு உட்படுத்தச் சம்மதித்ததாகவும்'' கூறப்படுகிறது. ""இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அணு உலைகளுக்குத் தேவைப்படும் எரிபொருளை, அந்த அணுஉலைகளின் ஆயுட்காலம் முழுவதும் வழங்குவதற்கு அமெரிக்கா உறுதியளித்த பிறகே, இந்தியா தனது நிலையை மாற்றிக் கொண்டதாக'' மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அமெரிக்கச் சட்டமோ, ""இறக்குமதி செய்யப்படும் அணு உலைகளுக்குத் தேவையான எரிபொருளை ஆயுட்காலம் முழுவதும் வழங்குவதற்கு எவ்வித உறுதியும் அளிக்காததோடு, இந்த அணு உலைகளுக்குத் தேவைப்படும் எரிபொருளை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் இந்தியா இறக்குமதி செய்து சேமித்து வைக்கவும்'' தடை விதித்திருக்கிறது. மேலும், அமெரிக்காவை ஓரங்கட்டிவிட்டு, அணு ஆற்றல் வழங்குவோர் குழுமத்தைச் சேர்ந்த மற்ற நாடுகளிடமிருந்து எரிபொருளை இறக்குமதி செய்ய இந்தியா முயன்றால், அதனையும் தடுக்க வேண்டும் என இச்சட்டம் குறிப்பிடுகிறது.

அவனின்றி ஓரணுவும் அசையாது என்பது போல, அமெரிக்காவின் விருப்பம், கண்காணிப்பின்றி, இறக்குமதி செய்யப்படும் அணு உலைகளை இயக்கும் சுதந்திரத்தை இந்தியாவிற்குத் தரக்கூடாது என்பதுதான் இச்சட்டத்தின் நோக்கம்.
""அணுகுண்டு சோதனைகளை இந்தியா நடத்தியிருப்பதால், இந்தியாவிற்கு அணுஆயுத வல்லரசு என்ற தகுதி வழங்கப்பட வேண்டும்; அமெரிக்கா, ரசியா, சீனா, பிரான்சு, இங்கிலாந்து ஆகிய ஐந்து அணு ஆயுத வல்லரசுகளை எந்தளவிற்கு சர்வதேச அணுசக்தி கமிசன் கண்காணிக்குமோ, அதைப் போலத்தான் இந்தியாவையும் கண்காணிக்க வேண்டும்; இதற்காக, சர்வதேச அணுசக்தி கமிசனில் இந்தியாவிற்கெனத் தனி விதிமுறைகளை உருவாக்க வேண்டும்'' எனக் கோரியிருப்பதாக, மன்மோகன் சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அமெரிக்கச் சட்டம் இவற்றுள் ஒன்றைக் கூட ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும், அணுசக்தி கூட்டுறவு ஒப்பந்தம் கையெழுத்தான பிறகே, இந்தியாவின் 14 அணு ஆலைகள் அணு சக்தி கமிசனின் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும் என மன்மோகன் அளித்திருந்த வாக்குறுதிக்கு மாறாக, அணுசக்தி கமிசனின் கண்காணிப்புக்கு இந்தியா உட்படுத்தப்பட்ட பிறகுதான், ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டும் என அமெரிக்கச் சட்டத்தில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

""அமெரிக்காவின் கண்காணிப்பாளர்கள் இந்திய அணு உலைகள் பக்கம் சுற்றுவதை அனுமதிக்க மாட்டோம்'' என நாடாளுமன்றத்தில் சூளுரைத்தார், மன்மோகன் சிங். அமெரிக்கச் சட்டமோ, ""அமெரிக்கா அணுசக்தித் துறையைச் சேர்ந்த மூன்று நிறுவனங்கள் இந்தியாவின் சிவில் அணு உலைகளைக் கண்காணித்து, அவை பயன்படுத்தப்படும் விதம் பற்றி அமெரிக்க நாடாளுமன்றத்திற்குத் தெரிவிக்க வேண்டும்'' எனக் குறிப்பிட்டுள்ளது.

""அமெரிக்க அதிபர், இந்தியாவின் அணுசக்தி பயன்பாடு குறித்து ஆண்டுதோறும் அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு நன்னடத்தைச் சான்றிதழ் தரவேண்டும்; அதன் அடிப்படையில்தான் இந்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்படும்'' என்ற நிபந்தனையை அமெரிக்கா இப்பேச்சு வார்த்தையின் தொடக்கத்திலேயே விதித்தது. இந்த நிபந்தனைக்கு எதிர்க்கட்சிகளிடமிருந்தும், விஞ்ஞானிகளிடமிருந்தும் வந்த எதிர்ப்பையடுத்து, மன்மோகன் சிங், ""இந்த நிபந்தனையை ஏற்றுக் கொள்ள மாட்டோம்'' என நாடாளுமன்றத்தில் வாக்குறுதி கொடுத்தார்.

அமெரிக்கச் சட்டமோ, ""சான்றிதழ்'' என்ற வார்த்தைக்குப் பதிலாக, ""மதிப்பீடு'' என்ற வார்த்தையைப் பயன்படுத்தியதற்கு மேல், வேறெந்த சலுகையினையும் வழங்கவில்லை.

""இந்தியாவில் கட்டப்படும் புதிய அணுக்கரு உலைகள் பற்றி; அணு ஆயுத உற்பத்தியில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டால், அம்மாற்றங்கள் பற்றி; அணுகுண்டினைத் தயாரிக்கத் தேவைப்படும் மூலப் பொருளின் சேமிப்பு பற்றி; அவை என்னென்ன வகையான மூலப்பொருள் என்பது பற்றி; சர்வதேசக் கண்காணிப்பின் கீழ் வராத, இராணுவ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் அணு உலைகளின் செயல்பாடு பற்றி; ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு யுரேனியம் இந்தியாவிலேயே வெட்டி எடுக்கப்படுகிறது; அதில் எவ்வளவு யுரேனியம் அணுகுண்டு தயாரிப்பதற்காக ஒதுக்கப்படுகிறது; அணுசக்தியின் மூலம் ஓர் ஆண்டில் எவ்வளவு யூனிட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது'' என்பது பற்றியெல்லாம் அமெரிக்க அதிபர் ""மதிப்பீடு'' செய்து அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு அறிக்கை அளிக்கவேண்டும்.

""இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை அமெரிக்காவின் கொள்கைகளுக்கு உகந்ததாக இருக்க வேண்டும்; அணு ஆயுதப் பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பான அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கையைச் செயல்படுத்துவதில் இந்தியா ஒத்துழைக்க வேண்டும்.''

""பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதங்களை (அணுகுண்டு) உற்பத்தி செய்யும் முயற்சியில் இறங்கியுள்ள ஈரானைக் கட்டுப்படுத்தவும்; தேவை ஏற்பட்டால் ஈரானின் மீது பொருளாதாரத் தடை விதிக்கவும் அமெரிக்கா எடுக்கும் முயற்சிகளுக்கு, இந்தியா முழுமையாகவும், ஊக்கத்தோடும் ஒத்துழைப்புத் தர வேண்டும்'' என அமெரிக்கச் சட்டம் குறிப்பிடுகிறது. இதனைப் பச்சையாகச் சொன்னால், இந்தியா, அமெரிக்காவின் உளவாளியாக, அடியாளாகச் செயல்பட வேண்டும் என்பதுதான்.

இந்தியா வருங்காலத்தில் புதிதாக அணுகுண்டு சோதனைகளை நடத்தாமல் தடுப்பதற்காக, ""அணுகுண்டு தயாரிக்கத் தேவைப்படும் மூலப்பொருட்களை உற்பத்தி செய்வதைத் தடை செய்யும் சர்வதேச ஒப்பந்தத்தை உருவாக்க அமெரிக்கா எடுத்துவரும் முயற்சிகளில் இந்தியாவும் ஒத்துழைக்க வேண்டும்'' எனக் குறிப்பிடும் இச்சட்டம், ""எந்தக் காரணத்தை முன்னிட்டாவது, இந்தியா மீண்டும் அணு ஆயுதச் சோதனைகளை நடத்துமானால், அமெரிக்கா இந்தியா அணு சக்தி கூட்டுறவு ஒப்பந்தத்தை, அமெரிக்கா ஒருதலைபட்சமாக முறித்துக் கொள்ளலாம்; இந்த ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவிற்கு அளித்த சாதனங்கள் அனைத்தையும், அமெரிக்கா திரும்பப் பெற்றுவிட வேண்டும்; ஒப்பந்தம் முறிந்து போன பிறகும்கூட, இந்தியாவின் சிவில் அணுஉலைகளை மூன்றாவது நபர்கள் கண்காணிப்பதை அமெரிக்கா உறுதி செய்து கொள்ள வேண்டும்'' என நிபந்தனைகளை விதித்திருக்கிறது.···இந்தியாவின் அரைகுறை இறையாண்மையைக் கூட உருவிக் கொண்டுவிட்ட இந்தச் சட்டம், இந்திய அரசிற்கும் அமெரிக்க அரசிற்கும் இடையே கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடந்துவரும் இரகசியப் பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டுள்ளது. ஆளுங்கட்சி எதிர்க்கட்சி போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்டு எல்லா வண்ண ஓட்டுக் கட்சிகளுமே, இந்த விசயம் குறித்து கூட்டுக் களவாணிகளாகத்தான் செயல்பட்டு வந்துள்ளன.
அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனமான என்ரானையே தூக்கியெறியத் தெம்பில்லாத பா.ஜ.க., இந்த ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும் எனக் கோருவதை, கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் கதையோடுதான் ஒப்பிட முடியும்.

1998இல் பா.ஜ.க. ஆட்சியில் இரண்டாம் முறையாக அணுகுண்டு சோதனை நடத்தியபின், ஏகாதிபத்திய நாடுகளின் பொருளாதாரத் தடையில் இருந்து தப்பிக்க, அப்பொழுது பிரதமராக இருந்த வாஜ்பாயி, ""இனி இந்தியா அணுகுண்டுப் பரிசோதனை நடத்தாது'' என ஐ.நா. மன்றத்திலேயே வாக்குறுதி அளித்தார். அப்பொழுது பாதுகாப்புத்துறை ஆலோசகராக இருந்த பிரஜேஷ் மிஸ்ரா, இந்தியாவின் அணு உலைகளைக் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரச் சம்மதிப்பதாக, அமெரிக்காவின் உள்துறைச் செயலராக இருந்த காலின் பாவெல்லிடம் தெரிவித்தார். இந்த ஒப்பந்தம் உருவாவதற்கு இவைதான் அடிப்படைகள் என்கிறது அமெரிக்கா. அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பா.ஜ.க. போட்டுச் சென்ற கோட்டில், காங்கிரசு ரோடு போட்டுவிட்டது என்பதுதான் உண்மை.
···
இந்த ஒப்பந்தம் இந்தியாவின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்யவோ, இந்தியாவை வல்லரசாக்கும் நோக்கத்திற்காகவோ உருவாக்கப்படவில்லை. இந்தியா பாகிஸ்தான் ஈரான் நாடுகளிடையே உருவாகவிருந்த எரிவாயு ஒப்பந்தத்தைத் தகர்ப்பதற்காக அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட அரசுதந்திரம்தான் இந்த ஒப்பந்தம்.

""ஈரானுடனான ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டால், இந்தியாவிற்கு அணுசக்தி துறையில் உதவுவோம்; இந்தியாவை வல்லரசாக்குவோம்'' என ஆசைகாட்டிய அமெரிக்கா, ""இதற்கு மறுத்தால், இந்தியா மீது பொருளாதாரத் தடை விதிப்போம்'' என கடந்த மார்ச் 2005இல் மிரட்டல் விட்டது.

இது ஒருபுறமிருக்க, ""புதிய நூற்றாண்டுக்கான அமெரிக்காவின் திட்டம்'' ஆசியாவில் சீனாவின் செல்வாக்கைக் கட்டுப்டுத்தக் கோருகிறது. அமெரிக்காவின் இந்த மேலாதிக்க நோக்கத்திற்கு இந்தியாவை அடியாளாகப் பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறது, அமெரிக்கா. ஏற்கெனவே சீன எதிர்ப்பில் மூழ்கிப் போயிருக்கும் இந்தியா; தெற்காசியாவில் அமெரிக்காவின் அடியாளாக அங்கீகாரம் பெறுவதற்கு ஏங்கிக் கொண்டிருந்த இந்தியா, அமெரிக்கா வீசியெறிந்த இந்த எலும்புத் துண்டை, அணுசக்தி ஒப்பந்தத்தைப் பிடித்துக் கொண்டது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்கா இந்தியா இடையே நடக்கவிருக்கும் அணுசக்தி வியாபாரத்தில் தனியார் முதலாளிகளும் பங்கு பெறலாம் என்பதால், இந்தியத் தரகு முதலாளிகள் அனைவரும் இந்த ஒப்பந்தத்தை வரவேற்கிறார்கள். 4,50,000 கோடி ரூபாய் பெறுமானமுள்ள இந்த வியாபாரத்தின் மூலம் கிடைக்கும் இலாபத்திற்காகவே, ""இறையாண்மை, சுயசார்பு'' போன்ற பழைய முகமூடிகளை அவிழ்த்து வீசிவிடத் தயாராகி வருகிறார்கள்.

அதனால்தான், நாட்டின் சுயமரியாதைக்கே எதிராக உள்ள இந்தச் சட்டத்தை வெளிப்படையாக எதிர்க்கத் துணியாத மன்மோகன் சிங் கும்பல், ""இந்தச் சட்டம் அமெரிக்க அதிபரைத்தான் கட்டுப்படுத்தும்; இந்தியாவை அல்ல'' என சால்ஜாப்பு சொல்கிறார். இந்தச் சட்டத்தின் அடிப்படையில் இந்தியா அமெரிக்கா இடையே உருவாகவுள்ள ""123 ஒப்பந்தத்தில்'' ங்""ஹைட்'' சட்டத்தின் அடிப்படையில் இந்தியா அமெரிக்கா இடையே கையெழுத்தாகவிருக்கும் ஒப்பந்தத்தின் பெயர் தான் "123 ஒப்பந்தம்'. இந்த ஒப்பந்தம் கையெழுத்தான பிறகுதான் இந்தியாஅமெரிக்கா இடையே அணுசக்தி கூட்டுறவும், வர்த்தகமும் தொடங்கப்படும்.சி இந்த விதிகளைச் சேர்க்க அனுமதிக்க மாட்டோம் என வீராப்பு பேசுகிறார்.

""அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு இந்தியா பணிந்து போன இரகசியம் மார்ச் மாதம் அம்பலமானபொழுது, அமெரிக்கச் சட்டம் வரட்டும் எனக் கூறி நம்மை முட்டாளாக்கினார்கள்; அமெரிக்க சட்டம் வந்த பிறகு "123 ஒப்பந்தம்' வரட்டும் எனக் கூறி நம்மை முட்டாளாக்கப் பார்க்கிறார்கள்'' என மன்மோகன் சிங்கின் வீராப்பை பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குனர் ஏ.என். பிரசாத் அம்பலப்படுத்துகிறார்.

சர்வதேச அணுசக்தி கமிசனில் ஈரானுக்கு எதிராக இந்தியா மூன்று முறை வாக்களித்தது; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்ட வெனிசுலாவிற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என வெள்ளை மாளிகையில் இருந்துவந்த தொலைபேசி மிரட்டலைப் பூசி மெழுகியது போன்ற விவகாரங்கள், இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையை அமெரிக்காதான் தீர்மானிக்கிறது என்பதை ஏற்கெனவே அம்பலப்படுத்தியுள்ளன.

அமெரிக்காவின் ஆதரவு பெற்ற பாகிஸ்தான் மீது இந்தியா ஒரு துப்பாக்கி ரவையைக் கூடச் சுட முடியாது என்ற கேவலமான உண்மையும், நாடாளுமன்றத் தாக்குதலின் பின் நடத்தப்பட்ட படை திரட்டலின் பொழுது பச்சையாகத் தெரிந்துவிட்டது. எனவே, புதிய அணுகுண்டு சோதனைகள் நடத்த வேண்டிய தேவையும் இந்தியாவிற்குக் கிடையாது.இப்படிப்பட்ட நிலையில், அமெரிக்கச் சட்டத்தில் உள்ள நிபந்தனைகள், ""123 ஒப்பந்தத்தில்'' சேர்க்கப்பட்டாலும், சேர்க்கப்படாவிட்டாலும், இந்தியாவின் அமெரிக்க அடிவருடித்தனத்தில் எந்த மாற்றமும் வந்துவிடாது என்பதே உண்மை.

தனியார்மயம் தாராளமயம் என்ற பெயரில் நாடே மறுகாலனியாக்கப்பட்டு வரும் வேளையில், இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையும், அணுசக்திக் கொள்கையும் மட்டும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலையீடின்றிச் சுதந்திரமாக இயங்க முடியும் என நம்புவதைவிட முட்டாள்தனம் வேறெதுவும் இருக்க முடியாது. ஆனால், போலி கம்யூனிஸ்டுகளோ, கடந்த ஆண்டு ஜூலையில் புஷ்ஷûக்கும், மன்மோகன் சிங்குக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே, அமெரிக்கச் சட்டமும், 123 ஒப்பந்தமும் இருக்க வேண்டும் எனக் கூச்சல் போடுகிறார்கள். அடியாளாக இருந்தாலும், கொஞ்சம் கௌரவமான அடியாளாக இருக்க வேண்டும். (இசுரேலைப் போல!) என்பதுதவிர, இந்த எதிர்ப்புக்கு வேறு பொருள் கிடையாது.
.
· செல்வம்
..

Saturday, September 1, 2007

மானங்கெட்ட சிங்கின் துரோகம் அணுசக்தி என்ற பெயரால் அரசியல் இராணுவ அடிமைத்தனம்

மறுகாலனியாக்கக் கொள்கைகளின் விளைவாக, இந்தியப் பொருளாதாரமும் எல்லா உற்பத்தி மற்றும் விநியோகத் துறைகளும் பன்னாட்டு நிறுவனங்களின் கோரப் பிடிக்குள் சிக்கி வருவதை நாமறிவோம். இந்தப் பொருளாதார அடிமைத்தனத்தை விஞ்சும் அளவில் அரசியல் மற்றும் இராணுவ அடிமைத்தனத்திற்கான சங்கிலிகள் நம்மீது பூட்டப்படுகின்றன. தனது குறைந்தபட்ச செயல்திட்டத்தில், பாரதிய ஜனதாவைப் போலன்றி தன்னை ஒரு அமெரிக்க எதிர்ப்பாளனாக சித்தரித்துக் கொண்டது, ஐக்கிய முற்போக்கு கூட்டணி.

ஆனால், பதவியில் அமர்ந்த மறுகணமே தன் நோக்கத்தைத் தெளிவாக வெளியிட்டார், மன்மோகன். ""அமெரிக்கா ஒரு வல்லரசு என்ற உண்மையை நாம் ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும்.... உலகப் பொருளாதாரம் மற்றும் அரசியலில் அமெரிக்கா மிக முக்கியப் பாத்திரம் வகிக்கிறது... எனவே, இருக்கின்ற சர்வதேச அமைப்புகளை நமது ஆதாயத்திற்கேற்ப நாம் பயன்படுத்திக் கொள்ளவேண்டும்'' என்றார். பிரதமர் நாற்காலியில் அமர்ந்திருக்கும் இந்த அமெரிக்க உளவாளியின் அடுத்தடுத்த நடவடிக்கைகள், நமது நாட்டை மீளவே முடியாத அடிமைப் படுகுழிக்குள் தள்ளி வருகின்றன.
..
ஜூன் 18,2005 அன்று புஷ்ஷûம் மன்மோகனும் அமெரிக்காவிலிருந்து வெளியிட்ட கூட்டறிக்கை, அதைத் தொடர்ந்து ஜுன் 28ஆம் தேதியன்று பிரணாப் முகர்ஜியும் ரம்ஸ்ஃபீல்டும் இணைந்து வெளியிட்ட இந்திய அமெரிக்க இராணுவ ஒப்பந்தம், அதனைத் தொடர்ந்து சர்வதேச அணுசக்தி ஏஜென்சியில் அமெரிக்காவின் ஆணைக்கிணங்க இரானுக்கு எதிராக மூன்று முறை இந்தியா அளித்திருக்கும் வாக்கு, இதே காலகட்டத்தில் முடக்கப்பட்டிருக்கின்ற இரான் இந்தியா எண்ணெய் எரிவாயுக் குழாய் திட்டம், தற்போது புஷ் வருகையை ஒட்டி திணிக்கப்படக் காத்திருக்கும் இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் ஆகிய இவையனைத்தும் அமெரிக்க சிலுவையில் நிரந்தரமாக இந்தியாவை அறைந்து விடுவதற்கான ஆணிகள். இவை தனித்தனி ஆணிகள் என்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாதவை என்றும் உளவாளி மன்மோகன் சிங் தொடர்ந்து புளுகி வந்தபோதிலும், உண்மை வெகு வேகமாக அம்பலமாகி வருகிறது.
..
இந்தியாவின் அதிகரித்து வரும் எண்ணெய் மற்றும் எரிவாயுத் தேவைகளை நிறைவு செய்வது, உலகச் சந்தையின் விலையேற்றங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வதன் மூலம் அந்நியச் செலாவணி இழப்பை தவிர்ப்பது, கப்பல் மூலம் எண்ணெய் எரிவாயு தருவிக்கும் செலவை இல்லாமல் செய்வது, இரானிலிருந்து பாகிஸ்தான் வழியாக எண்ணெய்க் குழாய் அமைப்பதன் மூலம் இந்தியா பாகிஸ்தானிடையே சமாதானம் நிலவுவதற்கான பொருளாதார அவசியத்தை உருவாக்குவது என்ற நோக்கங்களை முன்வைத்து இரான் இந்தியா எரிவாயுக் குழாய் ஒப்பந்தம் சென்ற ஆண்டில் உருவாக்கப்பட்டது. மூன்று நாடுகளுக்கிடையிலான பேச்சுவார்த்தை முடிந்து ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிலையில் இருந்தது.
..
இரு நாடுகளுக்கிடையே மட்டுமின்றி, எண்ணெய் எரிவாயு வளம் மிக்க இரான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளிலிருந்து தென்கிழக்காசிய நாடுகள் உள்ளிட்ட எல்லா ஆசிய நாடுகளையும் குழாய் மூலம் இணைப்பதற்கான திட்டமும் உருவாக்கப்பட்டிருந்தது. ஆசியப் பகுதிகளில் அமெரிக்க மேலாதிக்கத்தைத் தடுக்கும் நோக்கில் ரசியா மற்றும் சீனாவால் உருவாக்கப்பட்ட ஷாங்காய் கூட்டமைப்பின் அமர்வுகளில் இந்தியா இரான் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் கலந்து கொண்டுமிருந்தன.

இந்த ஒப்பந்தத்தை தகர்ப்பதற்காகவே மார்ச் 2005இல் இந்தியாவிற்கு "விஜயம்' செய்த அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலர் கன்டலிசா ரைஸ், தங்களால் ரவுடி அரசாகக் கருதப்படும் இரானுடன் இந்தியா இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திட்டால் பொருளாதாரத் தடையை எதிர்நோக்க வேண்டிவரும் என்று வெளிப்படையாக எச்சரித்தார். தன்னுடைய எரிசக்தித் தேவைகளுக்கு, கரியமில வாயுவை வெளியிட்டு சுற்றுச்சூழலை மாசாக்காத அணுசக்தியைப் பயன்படுத்துவது நல்லதென்றும் அதற்கு அமெரிக்கா உதவத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், இந்தியாவை உலக வல்லரசாக்குவது என்று அமெரிக்கா திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
..
கபடமும் திமிரும் நிறைந்த இந்தப் பேச்சை அரசு உடனே கண்டித்திருக்க வேண்டும். மாறாக, பிரதமர் மானங்கெட்ட சிங் அமெரிக்காவிலிருந்து இதை வழிமொழிந்தார். இரானிலிருந்து எரிவாயு கொண்டு வருவது பாதுகாப்பற்றது என்றும், அதற்கு எந்த வங்கியும் கடன் கொடுக்காது என்றும் அறிவித்ததுடன் இந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற முயற்சி எடுத்த மணிசங்கர் அய்யரை பதவியிலிருந்து தூக்கினார்.

சுற்றுச்சூழல் குறித்த அமெரிக்காவின் அக்கறைக்கு விளக்கம் தேவையில்லை. சில ஆண்டுகளுக்கு முன்னர்தான், எரிவாயு இறக்குமதி செய்து அதிலிருந்து மின்சாரம் தயாரிப்பதாகக் கூறிய அமெரிக்க என்ரானுக்கு இந்திய அரசு அனுமதி அளித்தது. பிறகு என்ரான் திவாலான பின் அந்த நிறுவனம் வாங்கிய கடன் 3300 கோடி ரூபாயை நம் வரிப்பணத்திலிருந்து கட்டியிருக்கிறது மன்மோகன் அரசு. இன்று அதே அமெரிக்கா எரிவாயுவை விட அணுசக்தி சிறந்தது என்று சொன்னவுடனே "ஆமாம்' என்று தலையாட்டுவதுடன் அணுசக்தி என்ற பெயரால் அடுத்த அடிமைத்தனத்திற்கு நாட்டை தயார்படுத்துகிறது.

அணுசக்தித் துறையைப் பொருத்தவரை, அதன் சிவில் பயன்பாட்டுக்கும் (மின்சாரம் போன்றவை) இராணுவப் பயன்பாட்டுக்கும் இடையில் வேறுபாடு இருந்தாலும், இவற்றின் அடிப்படையாக அமையும் ஆய்வுகளில் வேறுபாடு இல்லை. மேலும், அணுவெடிப்பு சோதனை நடத்தியுள்ள இந்தியா, அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் (கேகூ) கையெழுத்திடவும் மறுத்து வரும் நாடுமாகும். இதன் காரணமாக, அவ்வப்போது பொருளாதாரத் தடைகள் விதிப்பதுடன், அணுசக்தி தயாரிப்புக்குத் தேவையான செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை இந்தியாவுக்கு வழங்க அணு ஆயுத வல்லரசுகள் மறுத்தும் வருகின்றன.

இந்தியாவில் யுரேனியம் கிடைப்பதில்லை என்றாலும், அணுசக்தி தயாரிக்கப் பயன்படும் தோரியம் என்ற தாதுப்பொருள் ஏராளமாக (உலக இருப்பில் 75மூ) உள்ளது. துவக்கமுதலே இந்தியாவின் அணுசக்தி ஆய்வுகள் தோரியத்தை மையமாக வைத்து செய்யப்படுவதால், இந்த ஆய்வில் முன்னிலை வகிக்கிறோம் என்றும் இறுதிக்கட்ட ஆய்வில் உள்ள நாம் வெகு விரைவில் இத்துறையில் உலகின் முதல் நாடாகிவிடுவோம் என்றும் கூறுகிறார், பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குநர் ஏ.என்.பிரசாத். இதன் மூலம் ஆண்டுக்கு 5,30,000 மெகாவாட் மின்சாரத்தை அடுத்த 300 ஆண்டுகளுக்கு உற்பத்தி செய்ய முடியும் என்றும் கூறுகிறார்.

மன்மோகன் சிங் கும்பல் அமெரிக்காவில் கையெழுத்திட்டிருக்கும் இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம், தோரியத்திலிருந்து அணுசக்தி தயாரிக்கும் இந்த சுயசார்பான ஆய்வை ஒழித்துக் கட்டி, யுரேனியத்தை, அதாவது அமெரிக்க இறக்குமதியை சார்ந்திருக்கும் நிலையை இந்தியா மீது திணிக்கிறது. அணுமின்சார உற்பத்தி தோற்றுவிக்கும் அணுக்கழிவிலிருந்துதான் அணு ஆயுதம் தயாரிக்கப்படுவதால், இந்த அணுக்கழிவுகள் அனைத்தையும் தன்னிடம் ஒப்படைத்துவிட வேண்டுமென அமெரிக்கா கோருகிறது. மேலும், சிவில் உற்பத்திக்குத் தரப்படும் யுரேனியம் ஆயுத உற்பத்திக்கு பயன்படுத்தப்படாமல் இருக்கிறதா என்று கண்காணிக்கும் அதிகாரமும், இந்திய அணு ஆய்வுகளை சோதனையிடும் அதிகாரமும் தனக்கு வேண்டுமென்கிறது.

இந்த ஒப்பந்தம் ஒரு அடிமைச் சாசனம் என்று எதிர்க்கும் இந்திய அணு விஞ்ஞானிகள் அனைவரும், அணுசக்தித் துறையில் அமெரிக்கா முன்னிலை வகிக்கவில்லை என்றும், தற்போதைய நமது மொத்த மின் சக்தி தேவையில் 3மூ மட்டுமே அணுசக்தியிலிருந்து கிடைப்பது என்பதால் இந்த ஒப்பந்தமே அர்த்தமற்றது என்றும் குமுறுகிறார்கள்.

ஆனால், இவையெதையும் மன்மோகன் அரசு பொருட்படுத்தவில்லை. அணுசக்தி ஆய்வில் முன்னேறிய நாடு என்ற "பிரம்மரிஷி' பட்டத்தை அமெரிக்கா இந்தியாவுக்கு வழங்கவிருப்பதாகவும், ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சிலில் இடம் பிடிக்க இது உதவுமென்றும், அதாவது ரைஸ் கூறியது போல இந்தியாவை அமெரிக்கா வல்லரசாக்குமென்றும், அதற்காக இத்தகைய தியாகங்களைச் செய்யலாமென்றும் நியாயப்படுத்துகிறது. ஆனால், இந்தியாவை "அணு ஆய்வில் முன்னேறிய நாடு' என்று தாங்கள் கருதவில்லையென்றும், அணு ஆய்வில் ஈடுபட்டுவரும் நாடு என்று மட்டுமே கருதுவதாகவும் கூறி குட்டை உடைத்துவிட்டார், அமெரிக்க வெளியுறவுத்துறை இணைச்செயலர் பிரான்ஸ்.

இருந்தபோதிலும், புஷ் வருகையையொட்டி இந்திய அமெரிக்க அணுசக்தி கூட்டு என்ற பெயரிலான இந்த அடிமை ஒப்பந்தத்தை நிறைவேற்றத் துடிக்கிறது மன்மோகன் அரசு. ஏனெனில், இதற்கான அடிப்படை இந்திய அமெரிக்க இராணுவ ஒப்பந்தத்தில் இருக்கிறது. ஆசியப் பகுதியில் சீனாவுக்கு எதிரான அமெரிக்க அடியாளாக இந்தியாவை மாற்றும் ஜூலை, 2005 ஒப்பந்தம் இந்த அணுசக்தி அடிமைத்தனத்தை முன் நிபந்தனையாகக் கொண்டது. இந்தியாவில் சீனத்தை குறிவைத்து பாட்ரியட் ஏவுகணைகளை நிறுவுவது, பனிமலைகள் முதல் பாலைவனம் வரை அனைத்து வாய்ப்புகளையும் கொண்ட இந்தியாவில் தனது ஆக்கிரமிப்புப் போருக்கான பயிற்சிகளை அமெரிக்க இராணுவம் மேற்கொள்வது, அமெரிக்காவின் எதிர்கால ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் காலாட்படையாக இந்திய இராணுவம் பங்கு பெறுவது, 32,000 கோடி ரூபாய்க்கு அமெரிக்காவிடமிருந்து ஆயுதக் கொள்முதல், அமெரிக்கஇந்திய கடற்படைகள் இணைந்து இந்து மாக்கடல் பிராந்தியத்தில் ரோந்து சுற்றுவது என்பன போன்ற பல அம்சங்களை உள்ளடக்கியது அவ்வொப்பந்தம்.

வல்லரசு என்ற பெயரில் அமெரிக்க அடியாளாக நியமனம் பெறத்துடிக்கும் இந்திய ஆளும் வர்க்கத்தின் இந்தக் கனவுதான் இரானுக்கு எதிரான அநீதியான தீர்மானத்தில் இந்தியாவை கையெழுத்திட வைத்திருக்கிறது. உலக நாடுகளும் மக்களும் கண்டு வெறுக்கும் இசுரேலைப் போன்ற ஆனால் அதைவிடத் தரம் தாழ்ந்த அடியாளாக நம் நாடு மாற்றப்படுகிறது. மறுகாலனியாக்கம் தோற்றுவிக்கும் பொருளாதார அடிமைத்தனத்தினும் கொடிய இந்த அடியாள்தனத்திலிருந்து நாட்டை விடுவிக்க வேண்டுமானால் உளவாளி மன்மோகன் சிங் அரசு உடனே தூக்கியெறியப்பட வேண்டும். அமெரிக்க மேலாதிக்கத்திற்கும் மறுகாலனியாதிக்கத்திற்கும் எதிரான போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படவேண்டும்.

ரஹீம்
...

இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்- அம்பலமாகிறது அடிமைச் சாசனம்!

இந்தியாவின் எதிர்கால மின்சாரத் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்யவிருக்கும் கற்பக விருட்சமாகவும் "இந்தியாவும் ஒரு அணுஆயுத வல்லரசுதான்' என்பதற்கு அமெரிக்காவின் வாயிலிருந்து கிடைத்த பிரம்மரிஷிப் பட்டமாகவும் மன்மோகன் சிங் கும்பலால் சித்தரிக்கப்பட்ட இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் உண்மை முகம் நான்கே மாதங்களில் அம்பலமாகியிருக்கிறது. தானாக அம்பலமாகவில்லை. 27 ஜூலை 2006 அன்று அமெரிக்க நாடாளுமன்றம் இந்த ஒப்பந்தத்தைச் சட்டமாக்குவதற்காக நிறைவேற்றியுள்ள திருத்தங்கள் இவற்றை அம்பலமாக்கியிருக்கின்றன. அவை பின்வரும் நிபந்தனைகளை விதிக்கின்றன:

""1. இந்தியா இனி அணுஆயுதங்கள் தயாரிக்கக் கூடாது; கைவசம் இருக்கின்ற அணுஆயுதங்களை மெல்ல மெல்ல அழிப்பதையும் இறுதியில் அணுஆயுதங்களே இல்லாமல் செய்வதையும் உத்திரவாதப்டுத்த வேண்டும். இது எந்த அளவுக்கு நிறைவேறியிருக்கிறது என்பது குறித்து அமெரிக்க அதிபர் ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

2. அணுஆயுதம் தயாரிப்பதற்குத் தேவையான மூலக்கூறுகளின் உற்பத்தியை நிறுத்துவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட வேண்டும். இந்தியா குறிப்பிட்ட கால இலக்கிற்குள் இந்த உற்பத்தியை நிறுத்துவதை அமெரிக்க அதிபர் உத்திரவாதப்படுத்த வேண்டும் என்பதுடன் இது குறித்தும் அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு ஆண்டுதோறும் அதிபர் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

3. இந்த ஒப்பந்தம் அமலுக்கு வரவேண்டுமானால் அதற்கு முன் இந்தியாவின் அணு உலைகளை ஆய்வுக்கு உட்படுத்துவது தொடர்பாக சர்வதேச அணுசக்தி ஏஜென்சியுடன் இந்தியா உடன்பாடு செய்து கொள்ள வேண்டும்.

4. இந்தியாவின் அணுசக்தித் திட்டங்கள், அவற்றின் உற்பத்தித் திறன், கையிலுள்ள அணு ஆயுதங்கள், அணுஆயுதம் தயாரிக்க உதவும் மூலக்கூறுகளின் கையிருப்பு, இந்தியாவில் ஆண்டுதோறும் வெட்டியெடுக்கப்படும் யுரேனியத்தின் அளவு ஆகிய எல்லா இரகசியங்கள் குறித்தும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 31ஆம் தேதிக்குள் அமெரிக்க அதிபர் நாடாளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

5. அணு ஆயுதப் பரவல் தடுப்புக்காக அமெரிக்கா உருவாக்கியுள்ள (கட்டைப் பஞ்சாயத்து) அமைப்பில் இந்தியாவும் உறுப்பினராக வேண்டும். 6. இரானின் அணுசக்தித் திட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கு அமெரிக்காவுக்கு இந்தியா முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.''
இவை மட்டுமின்றி, இந்த ஆண்டின் இறுதியில் கூடவிருக்கும் அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவையான செனட்டில் நிறைவேற்றப்படுவதற்காகப் பின்வரும் திருத்தங்களும் தயாராக உள்ளன.

""1. இந்திய அணு உலைகள் அனைத்தையும் முழு கண்காணிப்பின் கீழ் கொண்டு வராதவரை தொழில் நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ள முடியாது.

2. 14 அணுசக்தி நிலையங்களை மட்டும் சர்வதேச அணுசக்தி ஏஜென்சியின் கண்காணிப்புக்கு அனுமதிப்பதாக இந்தியா கூறியுள்ளதை ஏற்கவியலாது; மீதமுள்ள 8 அணுசக்தி நிலையங்களையும் கண்காணிப்புக்குள் கொண்டுவர வேண்டும்.

3. இரான் போன்ற அணுஆயுதமில்லாத நாடுகள் எத்தகைய கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுகின்றனவோ, அதே விதமான கண்காணிப்புக்கு இந்தியாவும் உட்படவேண்டும்; இந்தியாவுக்கு அணுஆயுத நாடு என்ற சிறப்புத் தகுதியோ, விதிவிலக்கோ தரவியலாது.

4. சர்வதேச அணுசக்தி ஏஜென்சியின் சோதனை மட்டுமின்றி அமெரிக்க அதிகாரிகளின் நேரடி சோதனைக்கும் இந்தியா உட்படவேண்டும்.

5. இந்தியாவுக்குச் செறிவூட்டப்பட்ட யுரேனியம் வழங்கலாமென அமெரிக்கா திருப்தியடையாத பட்சத்தில், யுரேனியம் விற்கும் பிற நாடுகளும் இந்தியாவிற்கு அதனை விற்பனை செய்யாமல் தடுக்க அமெரிக்க அரசு முயற்சிக்க வேண்டும்.''

சென்ற ஆண்டு ஜூன் 18ஆம் தேதி புஷ்ஷýம் மன்மோகனும் அமெரிக்காவிலிருந்து வெளியிட்ட கூட்டறிக்கையிலும் இந்த ஆண்டு மார்ச் மாதம் கையெழுத்திடப்பட்ட புஷ் மன்மோகன் சிங் உடன்பாட்டிலும் பூடகமாக மறைக்கப்பட்டிருந்த அமெரிக்க மேலாதிக்க நோக்கங்களை இந்தத் "திருத்தங்கள்' வெளிக் கொண்டு வந்திருக்கின்றன.
""இந்தியாவின் இறையாண்மையையும் அணுசக்தி சுயசார்பையும் பாதிக்கின்ற எந்தவித நிபந்தனைகளுக்கும் உட்படமாட்டோம்'' என கடந்த மார்ச் மாதத்தில் இந்திய நாடாளுமன்றத்திற்கு உறுதிமொழி அளித்த மன்மோகன் சிங், அமெரிக்க நாடாளுமன்றத்தில் கடந்த 20 நாட்களாக இந்த திருத்தங்கள் குறித்த விவாதங்கள் நடைபெற்றபோது வாய் திறக்கவில்லை. ரசியாவில் நடைபெற்ற ஜி8 நாடுகளின் மாநாட்டிற்குச் சென்றிருந்த மன்மோகன் சிங்கிடம் தங்களது நிருபர் நிர்ப்பந்தித்துக் கேட்டபிறகுதான், திருத்தங்களின் சில அம்சங்கள் கவலையளிப்பதாக மன்மோகன் சிங் பதிலளித்தாரென்று தனது தலையங்கத்தில் (ஜூலை20) குறிப்பிடுகிறது. ""தி இந்து'' நாளேடு. அதன் பிறகு புஷ்ஷை சந்தித்த மன்மோகன் சிங், ""போட்ட ஒப்பந்தத்தை ஒருதலைப்பட்சமாக ஏன் மீறுகிறீர்கள்?'' என்று கேள்வி எழுப்பவில்லை. ""நாங்கள் ஒரு ஜனநாயக நாடு. நாங்கள் எங்களுடைய நாடாளுமன்றத்துக்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. சில விசயங்கள் எங்களுக்கும் எங்கள் நாடாளுமன்றத்துக்கும் கவலை அளிக்கின்றன'' (இந்து, 18.7.06) என்று புஷ்ஷிடம் கவலை தெரிவித்தாராம். ஆவன செய்வதாக புஷ் உறுதியளித்துள்ளாராம்!
..
""அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடைபெறும் விவாதம் குறித்து நானும் இந்திய வெளியுறவுச் செயலர் சியாம்சரணும் ஜூலை 10ம் தேதியன்று பாரிசில் 5 மணிநேரம் பேசியிருக்கிறோம்'' என்று கூறி மன்மோகன் சிங் கும்பலின் குட்டை உடைத்துவிட்டார் அமெரிக்க வெளியுறவுத்துறை இணைச்செயலர் நிகோலஸ் பர்ன்ஸ். "ஆவன செய்வதாக'க் கூறிய புஷ்ஷின் வெள்ளை மாளிகையோ நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ள திருத்தங்களை வரவேற்றிருக்கிறது. திரைமறைவு பேரங்கள் முடிந்துவிட்ட நிலையில் இந்திய மக்களை ஏமாற்றுவதற்காக நடத்தப்படும் நாடகங்கள்தான் மன்மோகன் வெளியிடும் அறிக்கைகள் என்ற உண்மையை மன்மோகன் சிங்கே நிரூபிக்கிறார்.

அணுசக்திக் கமிசனின் முன்னாள் தலைவர் எம்.ஆர். சீனிவாசன், பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குநரும், சர்வதேச அணுசக்தி ஏஜென்சியின் இந்தியப் பிரதிநிதியுமான ஏ.என். பிரசாத், அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவரான ஏ.ஆர். கோபாலகிருஷ்ணன் என விஞ்ஞானிகள் அனைவரும் ஒருமித்த குரலில் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்துள்ளனர். அவர்களுடைய வாதங்கள் எதற்கும் மன்மோகன் கும்பல் பதிலளிக்கவில்லை. ""அனாவசியமாகப் பிரச்சினையை மிகைப்படுத்தாதீர்கள். செனட்டிலும் விவாதம் முடிந்து அமெரிக்க சட்டத்தின் இறுதி வடிவம் வரட்டும். அதில் ஏதாவது பிரச்சினை இருந்தால் நான் நாடாளுமன்றத்துக்குத் தெரிவிக்கிறேன்'' என்பதுதான் மன்மோகன் சிங் கூறியுள்ள பதில்.

""அணு ஆயுதம் தயாரிக்கும் உரிமையைப் பறிப்பதால் அது இந்தியாவின் பாதுகாப்புக்கே ஆபத்து'' என்று கூச்சலிட்டது பாரதிய ஜனதா. ""சுயேச்சையான வெளியுறவுக் கொள்கை வகுக்க முடியாமல் செய்து இந்தியாவை அமெரிக்காவின் உலக யுத்த தந்திரத் திட்டத்தில் பிணைக்கிறது; அணுசக்தி சுயசார்பை அழிக்கிறது'' என்று கூறி இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக "நாடாளுமன்றத்தின் உணர்வை வெளிப்படுத்தும் தீர்மானத்தை'க் கொண்டுவரப் போவதாக "எச்சரித்தது' சி.பி.எம். கட்சி. ""அத்தகையதொரு தீர்மானம் கொண்டுவரப்பட்டால் நான் இந்த அரசில் இருக்க மாட்டேன், இந்த அரசாங்கமும் இருக்காது'' என்று பதிலுக்கு சி.பி.எம்.மை எச்சரித்தார். பாதுகாப்புத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி. உடனே, தாங்கள் சி.பி.எம்.மின் தீர்மானத்தை ஆதரிக்கப் போவதில்லை என்று நழுவியது பா.ஜ.க. ""அரசாங்கத்தை மிரட்டுவது எங்கள் நோக்கமல்ல, இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான ஒரு சட்டகத்தை முன்மொழிவதுதான் எங்கள் நோக்கம்'' என்று விளக்கமளித்திருக்கிறார் "மார்க்சிஸ்டு' கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத்.

புஷ் மன்மோகன் ஒப்பந்தம் என்பது சொக்கத்தங்கம் போலவும், அதற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் திருத்தங்கள்தான் பிரச்சினை என்பது போலவும் ஒரு பொய்ச்சித்திரம் ஓட்டுக்கட்சிகளாலும் ஊடகங்களாலும் திட்டமிட்டே உருவாக்கப்படுகிறது. மாறாக, இன்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தங்கள் அனைத்தையும் அமெரிக்க தூதர் முல்ஃபோர்டு, கன்டலிசா ரைஸ், நிகோலஸ் பர்ன்ஸ் போன்ற பல அதிகாரிகளும் மார்ச் ஒப்பந்தத்திற்கு முன்னதாகவே பேசியுள்ளனர். இவை தொடர்பாக மன்மோகன் சிங் கூறிய பொய்களும் அப்போதே அம்பலமாகி இருக்கின்றன. (பு.ஜ. மார்ச், ஏப்ரல் 2006)
நாடாளுமன்றத்துக்கு மட்டுமின்றி அமைச்சரவைக்குக் கூடத் தெரியாமல் ஜூன், 18, 2005 அன்று மன்மோகன் சிங் புஷ்ஷடன் இணைந்து அமெரிக்காவிலிருந்து வெளியிட்ட கூட்டறிக்கையும், ஜூன் 28,2005இல் பிரணாப் முகர்ஜி அமெரிக்காவில் கையெழுத்திட்ட இராணுவ ஒப்பந்தமும்தான் மார்ச் மாதம் கையெழுத்தான ஒப்பந்தத்தின் அடிப்படைகள். அந்த அடிப்படையில்தான் இரானுக்கு எதிராக சர்வதேச அணுசக்தி ஏஜென்சியில் இந்தியா வாக்களித்தது. இரானுடனான எரிவாயுக் குழாய் திட்டம் கிடப்பில் போடப்பட்டதற்கும் இதுதான் அடிப்படை. இந்தியாவின் அரசியல், பொருளாதார, இராணுவக் கொள்கைகள் இந்த அடிப்படையிலிருந்துதான் தீர்மானிக்கப்படுகின்றன.

ஆட்சியே போனாலும் ஒப்பந்தத்தை விடமுடியாது என்ற பிரணாப் முகர்ஜியின் மிரட்டலுக்கும், தேசிய கவுரவத்தின் மொத்தக் குத்தகைதாரர்களான பார்ப்பன பாசிஸ்டுகளின் "பல்டி'க்கும், அமெரிக்க ஒப்பந்தத்துக்கு ஆலோசனை வழங்குவதாக "மார்க்சிஸ்டுகள்' அடக்கி வாசிப்பதற்கும் வேறென்ன விளக்கம் இருக்கிறது? ஆசியாவுக்கான அமெரிக்க அடியாள் என்ற பதவியில் நியமனம் பெறுவதன் மூலம் மறுகாலனியாக்கத்தின் ஆதாயங்களைச் சுவைக்க வெறி பிடித்து அலைகின்றது இந்தியத் தரகு முதலாளிவர்க்கம். அதன் பொருட்டு "இறையாண்மை, சுயசார்பு' போன்ற பழைய உள்ளாடைகளை அவிழ்த்து வீசிவிட்டு அம்மணமாக நடனமாடவும் தயாராக இருக்கிறது. இநத நிர்வாண நிலையை எழுத்துபூர்வமாக உத்திரவாதப்படுத்த விரும்புகிறது அமெரிக்க வல்லரசு. ""நாமும் ஒரு வல்லரசு என்று கூறிக் கொள்வதால் அதைக் கொஞ்சம் இலைமறை காயாக செய்யக்கூடாதா?'' என்பதுதான் இப்போது நாடாளுமன்றத்தைக் கலக்கிக் கொண்டிருக்கும் விவாதம். இந்தக் கேலிக்கூத்தின் முரண்நகையாக பத்தாண்டுகளுக்கு முன் பிரதமர் அலுவலகத்தில் இருந்த அதிகாரிகள் அமெரிக்க உளவாளிகள் என்ற பிரச்சினையை எழுப்பியிருக்கிறார் "தேசபக்தர்' ஜஸ்வந்த் சிங். இப்போது பிரதமர் நாற்காலியில் அமர்ந்திருப்பவரே ஒரு அமெரிக்க உளவாளிதானே!
..

அமெரிக்க-இந்திய இராணுவ-அணுசக்தி ஒப்பந்தங்கள்: அமெரிக்க அடிமைத்தனத்தில்

புதிய அத்தியாயம் பிரதமர் மன்மோகன் சிங், அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா செல்வதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பாக, இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் இடையே இராணுவ ஒப்பந்தமொன்று கையெழுத்தானது; அவர் அமெரிக்கா சென்றிருந்த பொழுது, அணு சக்தி ஒத்துழைப்பு குறித்த மற்றொரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே எத்தனையோ ஒப்பந்தங்கள் போடப்பட்டிருந்தாலும், அவற்றையெல்லாம் விட, தற்பொழுது கையெழுத்தாகியுள்ள இவ்விரு ஒப்பந்தங்களை வரலாற்றுத் திருப்பம் என்றும்; குறிப்பாக, அணுசக்தி குறித்த ஒப்பந்தம் இந்தியாவை வல்லரசாக்க உதவும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அமெரிக்க ஆதரவாளர்கள் உற்சாகம் பீறிடக் குறிப்பிடுகிறார்கள்.

இராணுவ ஒப்பந்தத்தின்படி, அமெரிக்கா மற்றும் இந்தியாவின் நலன்களுக்கு ஏற்ற விதத்தில், இரு நாட்டுப் படைகளும் கூட்டாக இணைந்து, உலகின் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடும். இரண்டாவதாக, ஏவுகணைத் தாக்குதல்களில் இருந்து தற்காத்துக் கொள்ளும் திட்டத்தில் இரு நாடுகளும் ஒத்துழைக்கும். மூன்றாவதாக, தரை, கடல், வான் வழியாக பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதங்கள் கடத்தப்படுவதைத் தடுக்க, இரு நாட்டுப் படைகளும் கூட்டு நடவடிக்கைகளில் ஈடுபடும். நான்காவதாக, இரு நாடுகளும் இணைந்து ஆயுதம் மற்றும் இராணுவத் தளவாட உற்பத்தியில் ஈடுபடும்.

அணு சக்தி தொடர்பாக போடப்பட்டுள்ள ஒப்பந்தத்தின்படி, சமூகப் பயன்பாட்டுக்காக (மின்சாரம் உற்பத்தி செய்வது) இயக்கப்படும் அணு உலைகள்; இராணுவப் பயன்பாட்டுக்காக (அணுகுண்டு தயாரிப்பது) இயக்கப்படும் அணு உலைகள் என இந்தியா தனது அணு உலைகளை இரண்டாகப் பிரிக்க வேண்டும். சமூகப் பயன்பாட்டுக்காக இயக்கப்படும் அணு உலைகளை சர்வதேச அணுசக்தி கழகத்தின் கண்காணிப்புக்கு உட்படுத்த வேண்டும்; புதிதாக அணுகுண்டுச் சோதனைகள் நடத்தக் கூடாது; அணு ஆயுத நாடுகள் உருவாக்கியுள்ள, அணுகுண்டு தயாரிப்பதற்குப் பயன்படும் வேதிப் பொருட்களை ஏற்றுமதி செய்வதைக் கட்டுப்படுத்தும் சட்டத்திற்கு கட்டுப்பட்டு இந்தியா நடக்க வேண்டும்; அணு ஆயுத நாடுகள் போட்டுள்ள ஏவுகணை சோதனை கட்டுப்பாடு குறித்த சட்டதிட்டங்களுக்கும் கட்டுப்பட்டு, இந்தியா நடக்க வேண்டும்.

இந்த இரண்டு ஒப்பந்தங்களையும், சாதாரண வர்ததக ஒப்பந்தம் போல பார்க்க முடியாது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கடைக்கண் பார்வைக்காக, இந்தியா, ""இதுதான் எங்களது அணுக் கொள்ளை''; ""இது தான் எங்களது இராணுவக் கொள்கை'' என்று கூறி வந்ததை தடாலடியாக மாற்றிக் கொண்டு விட்டது. சொல்லப் போனால், அமெரிக்காவின் மேலாதிக்க வெறிக்கு இந்தியாவைப் பலிகடா வாக்கும் அடிமைச் சாசனத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருக்கிறது, மன்மோகன் சிங் கும்பல்.
------
இந்தியாவிற்குப் போலி சுதந்திரம் கிடைத்த நாளில் இருந்தே, ""அணி சேராமை எங்களது வெளியுறவுக் கொள்கை'' என வாய்ச்சவடால் அடித்து வருவது இந்தியாவின் வாடிக்கையாக இருந்து வருகிறது. ஆனால், இப்பொழுதோ, இந்த வாய்ச்சவடால்களைக் கூட வெளிப்படையாக மூட்டை கட்டி வைத்துவிட்டு, அமெரிக்காவின் நாடு பிடிக்கும் ஆக்கிரமிப்பு போர்களில் இந்திய இராணுவத்தைக் கூலிப்படையாக அனுப்பும் உத்தரவாதத்தோடு இராணுவ ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

இந்திராகாந்தி ஆட்சியின் பொழுது, சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தோடு, இந்தியா இராணுவ ஒப்பந்தமொன்றைப் போட்டுக் கொண்டது. (இந்தியாவின் அணிசேராக் கொள்கை அப்பொழுதே பல்லைக் காட்டிவிட்டது தனிக்கதை) அந்த இராணுவ ஒப்பந்தத்தைவிட, தற்பொழுது அமெரிக்க மேலாதிக்க வல்லரசோடு போடப்பட்டுள்ள இராணுவ ஒப்பந்தம் மிகவும் அபாயகரமானது. ஏனென்றால், இந்திய சோவியத் ஒப்பந்தத்தில் இந்திய இராணுவத்தைக் கூலிப்படையாக பயன்படுத்தும் விதிகள் இருந்ததில்லை.

இந்திய இராணுவத்தைக் கூலிப்படையாகப் பயன்படுத்துவது என்ற அம்சம் இந்த ஒப்பந்தத்தில் பச்சையாகச் சொல்லப்படவில்லை; ஆனால், அது, ""இந்திய அமெரிக்க நலன்கள் ஒத்துப் போனால்; ""ஜனநாயகத்தைப் பரப்புவது''; ""பன்னாட்டு நடவடிக்கை'' என்ற வார்த்தைகளின் பின்னே ஒளித்து வைக்கப்பட்டுள்ளது.

ஒரு ஆக்கிரமிப்புப் போரின் மூலமாகவோ அல்லது அதிரடி அரண்மனைப் புரட்சிகளின் மூலமாகவோ தனது கைக்கூலிகளைப் பதவிக்குக் கொண்டு வருவதுதான் ""ஜனநாயகத்தைப் பரப்பும்'' அமெரிக்க பாணி. ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் ஜனநாயகத்தைக் கொண்டு வருவதற்காக அமெரிக்கா நடத்தி வரும் அட்டூழியங்களை அதற்குள்ளாகவா மறந்து விட முடியும்?

அமெரிக்க இராணுவத்துக்கு ஆலோசகராகச் செயல்படும் ஐ.ஏ.டி.ஏ.சி., என்ற அமைப்பு, ""ஆசிய கண்டத்தில் அமைதி காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது; தீவிரவாதிகளைத் தேடுவது; பணயக் கைதிகளைக் காப்பாற்றுவது; அமெரிக்காவின் உயர் தொழில் நுட்ப சரக்குகளின் போக்குவரத்திற்குப் பாதுகாப்பு அளிப்பது போன்ற கடைகோடி இராணுவ நடவடிக்கைகளைச் செய்யக் கூடிய திறமைமிக்க கூட்டாளி கிடைத்தால், அமெரிக்கா தனது வலிமையை முழுமையாக தாக்குதல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தும்'' எனக் குறிப்பிடுகிறது. அமெரிக்கா ஒதுக்கும் இந்தக் கடைகோடி வேலைகளைச் செய்யும் எடுபிடியாக இந்திய இராணுவத்தை மாற்றும் நோக்கத்தோடுதான் இந்த இராணுவ ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் உலக மேலாதிக்கப் போர்த் தேரில் இந்தியாவும் இப்போது பிணைக்கப்பட்டு விட்டது.

""மேற்காசியாவில் ஈராக்கிற்கு அடுத்து ஈரானில் ஜனநாயகத்தைக் கொண்டு வருவது; கிழக்காசியாவில் அணு ஆயுத பலம் கொண்ட வடகொரியாவை மிரட்டிப் பணிய வைப்பது; மத்திய ஆசியாவில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள எண்ணெய் வளத்தை தானே கபளீகரம் செய்வது; இவை எல்லாவற்றுக்கும் மேலாக சீனாவைத் துள்ளவிடாமல் கட்டிப் போடுவது'' என அமெரிக்கா, ஆசியாவைத் தனது மேலாதிக்கப் பிடிக்குள் வைத்துக் கொள்ளப் பல திட்டங்களை வைத்திருக்கிறது. இதற்கெல்லாம் இந்திய இராணுவம் கூலிப்படையாகப் பயன்படுத்தப்படும்.

""பதற்றம் நிறைந்த மத்திய ஆசியா, தென்கிழக்காசியா, பாரசீக வளைகுடா பகுதிகளுக்கு அமெரிக்க போர் விமானங்கள் மிகவும் விரைவாகச் சென்றடைவதற்கு, இந்தியாவின் நவீன இராணுவக் கட்டுமானங்கள் பயன்படும்'' என்கிறார், அமெரிக்க விமானப் படையைச் சேர்ந்த அதிகாரி.

""சீனாவின் அச்சுறுத்தலை எதிர் கொள்வதற்கு, அமெரிக்க இராணுவத்திற்கு 2020ஆம் ஆண்டு வாக்கில் ஒரு நண்பன் தேவைப்படும். இதற்கு இந்தியாவின் இராணுவ வலிமை பயன்படும் என்பதை நாம் மறுக்க முடியாது'' என்கிறது ஐ.ஏ.டி.ஏ.சி. அமைப்பு. 2020இல் இந்தியா, அமெரிக்காவின் கைக்கூலி நாடாக மாறிவிடும் என்பதைத்தான் வல்லரசாகிவிடும் எனப் பூசி மெழுகுகிறார்கள் போலும். தாதாவுக்குக் கீழ் வேலை பார்ப்பவனும் தாதா தானே!

அமெரிக்கா, ஈராக் மீது போர் தொடுத்து சதாம் உசேன் ஆட்சியைத் தூக்கியெறிந்த பின், அந்நாட்டில் சில வேலைகளை ""காண்டிராக்ட்'' எடுக்க இந்தியத் தரகு முதலாளிகள் முயன்றனர். இதற்காக இந்திய இராணுவத்தை ஈராக்குக்கு அனுப்பி வைக்கவும், அப்பொழுது ஆட்சியில் இருந்த பா.ஜ.க. அரசு தயாராக இருந்தது. ஆனால், உள்நாட்டில் எழுந்த எதிர்ப்பின் காரணமாக பா.ஜ.க. அரசால் படையை அனுப்ப முடியாமல் போனது; இதனால் அமெரிக்காவும் வேலைகளை இந்திய நிறுவனங்களுக்குத் தர மறுத்து விட்டது.

தற்பொழுது போடப்பட்டுள்ள இராணுவ ஒப்பந்தத்தின் காரணமாக, இனி, இது போன்ற எலும்புத் துண்டுகளைப் பரிசாகப் பெறுவதற்கு இந்திய ஆளும் கும்பலுக்குத் தடையேதும் இருக்காது. ""தீவிரவாதத்துக்கு எதிரான போருக்கு''த் தலைமை தாங்கும் அமெரிக்காவிற்கு கறித்துண்டு என்றால், அதற்கு அடியாள் வேலை செய்யப் போகும் இந்திய ஆளும் கும்பலுக்கு எலும்புத் துண்டு என்பதுதான் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான ஒத்த நலன்.

இந்தியா ""அக்னி'', ""பிருத்வி'' ஆகிய ஏவுகணைகளைத் தயாரித்துச் சோதனைச் செய்வதையும்; அவற்றை இராணுவத்தில் சேர்ப்பதையும் ஆரம்பம் முதலே எதிர்த்து வரும் அமெரிக்கா, இந்த திட்டத்தை முடமாக்கும் நோக்கத்தோடுதான், ""பேட்ரியாட்'' ஏவுகணைகளை இந்தியாவிற்கு விற்கவும், அமெரிக்காவின் உலகு தழுவிய ஏவுகணை பாதுகாப்புத் திட்டத்தில் இந்தியாவை இணைத்துக் கொள்ளவும் சம்மதித்திருக்கிறது.

மேலாதிக்க போர் வெறிபிடித்த ரீகனின் ஆசைக் கனவான ""நட்சத்திர போர்'' (ஸ்டார் வார்ஸ்) என்ற நாசகாரத் திட்டத்தின் புதிய அவதாரம்தான் ஏவுகணை பாதுகாப்புத் திட்டம். உலகு தழுவிய அளவில் மின்னணு போரை நடத்துவதற்கான ஏற்பாட்டில் இணைந்ததன் மூலம், இந்திய ஆளும் கும்பல் ""அமைதி'', ""போர்களற்ற உலகம்'' என்ற வார்த்தைகளைப் பேசுவதற்கே அருகதையற்றதாகி விட்டது.

இந்திய இராணுவத்தையே அமெரிக்காவின் தத்துப் பிள்ளையாக மாற்றும் நோக்கத்தோடு போடப்பட்டுள்ள இந்த இராணுவ ஒப்பந்தத்தை, எந்தவொரு உயர் இராணுவ அதிகாரியும் எதிர்க்கவில்லை. இதற்குக் காரணம் இராணுவக் கட்டுப்பாடு அல்ல. அமெரிக்காவிடமிருந்து இந்தியா வாங்கப் போகும் ஆயுதப் பேரத்தில் கிடைக்கப் போகும் கமிசன். கார்கில் போரில் செத்துப் போன இராணுவ வீரர்களுக்கு சவப்பெட்டி வாங்குவதிலேயே கமிசன் அடித்த இராணுவக் கும்பல், பல்லாயிரக்கணக்கான கோடி அளவில் நடைபெறவுள்ள ஆயுத பேரத்தை சும்மா விட்டுவிடுமா?

நம்மை ஆண்ட பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், தனது மேலாதிக்க நோக்கங்களுக்காக ""போயர்'' போரிலும், முதல், இரண்டாம் உலகப் போர்களிலும் இந்திய இராணுவச் சிப்பாய்களைக் கூலிப் படையாகப் பயன்படுத்தியதைப் போல, அமெரிக்கா பயன்படுத்தும். டல்ஹெளசி பிரபு கொண்டு வந்த துணைப் படைத்திட்டம் இந்திய சுதேசி மன்னர்களின் படைகளை, பிரிட்டிஷ் இராணுவத்தின் தொங்கு சதையாக மாற்றியதைப் போல, இந்த இராணுவ ஒப்பந்தம் "சுதந்திர' இந்தியாவின் இராணுவத்தை அமெரிக்காவின் தொங்கு சதையாக மாற்றுகிறது. காலனிய காலந்தொட்டே இந்திய மக்களை ஒடுக்குவதை நோக்கமாகக் கொண்டு வளர்க்கப்பட்டுள்ள இந்திய இராணுவம், அமெரிக்க மேலாதிக்கத்தை எதிர்த்துப் போராடும் பிற நாட்டு மக்களையும் இனி விட்டு வைக்காது.
--------
அமெரிக்காவை எதிர்க்கும் நாடுகள் என்பதாலேயே , அணு ஆற்றலைப் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தைப் பெற்றுள்ள வட கொரியாவையும், ஈரானையும் ""போக்கிரி அரசுகள்'' எனத் திட்டித் தீர்க்கும் அமெரிக்க அதிபர் புஷ், இந்தியாவை, ""முன்னேறிய நவீன அணு தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ள பொறுப்பான நாடு'' எனப் பாராட்டுகிறார். நீட்டிய இடத்தில் கையெழுத்துப் போட்டதற்குக் கிடைத்த பாராட்டு என்பதற்கு மேல், இதில் அலசி ஆராய்வதற்கு எதுவுமே இல்லை. ஆனால் அமெரிக்க அடிவருடிகளோ, இந்தப் பாராட்டைக் கேட்டவுடனேயே, ""இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக அமெரிக்கா மறைமுகமாக ஏற்றுக் கொண்டு விட்டதாக'' இதற்குப் பொழிப்புரை எழுதுகிறார்கள்.

இந்தியாவில் உள்ள 15 அணு உலைகளில் ஒன்றுகூட சமூகப் பயன்பாட்டுக்காக (மட்டும்) இயக்கப்படவில்லை என்பதே உண்மை. ""இந்தியாவில் உள்ள அணு உலைகளை சமூகப் பயன்பாட்டுக்கானது, இராணுவப் பயன்பாட்டுக்கானது என இரண்டாகப் பிரிப்பது கடினம்'' என அணு விஞ்ஞானிகள் கூறியிருப்பதில் இருந்தே இதனைத் தெரிந்து கொள்ளலாம். அதனால்தான் இராணுவ ஒப்பந்தத்தின் மை உலரும் முன்பே, அணு சக்தி ஒப்பந்தத்திலும் இந்தியாவைக் கையெழுத்துப் போட வைத்துவிட்டது அமெரிக்கா.

அணு ஆயுதப் பரவல் சட்டத்தில் கையெழுத்துப் போட முடியாது; சர்வதேச அணு சக்தி கழகத்தின் கட்டுப்பாடுகளுக்குக் கட்டுப்பட முடியாது என்றெல்லாம் வீறாப்பாக முழங்கிக் கொண்டிருந்த இந்தியா, இன்று, அணுசக்தி தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்றம் வகுக்கும் விதிகளுக்கும் கட்டுப்படுவதாக ஒப்புக் கொண்டுள்ளது.

ஒப்பந்தம் என்றால், அதில் கையெழுத்துப் போடும் இரண்டு தரப்புக்குமே சமமான அளவில் இலாபம் இருக்க வேண்டும். இந்தியா, தனது அணு சக்தி கொள்கையையே மாற்றிக் கொண்டுள்ளது. இதற்குப் பிரதிபலனாக அதிபர் புஷ், ""அணு தொழில்நுட்பத்தை இந்தியாவிற்குத் தர விதிக்கப்பட்டுள்ள தடைகளைத் தளர்த்த அமெரிக்க நாடாளுமன்றத்தில் முயற்சி செய்வேன்; அணு ஆயுத வல்லரசு நாடுகளிடம், இந்தியாவை விதிவிலக்காகப் பாவித்து, அணு வேதிப் பொருட்கள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள விதிகளைத் தளர்த்துமாறு கோருவேன்'' என்ற வாக்குறுதிகளை மட்டுமே கொடுத்துள்ளார்.

இந்தியாவைச் சேர்ந்த அணு சக்தி விஞ்ஞானிகளோ, ""வாக்குறுதிகள் யாருக்கு வேண்டும்? எங்களுக்கு யுரேனியம் தான் வேண்டும்'' என்று முணுமுணுக்கிறார்கள். அடுத்தடுத்து பல அணு உலைகளை இந்தியா அமைத்திருந்தாலும், அவற்றுக்குத் தேவைப்படும் யுரேனியத்தை இறக்குமதி செய்து கொள்வதற்கு அமெரிக்காவைத்தான் மலைபோல நம்பியிருக்கிறது. இந்திய அணுசக்தி துறையின் குடுமி, இன்று அமெரிக்காவின் கைகளுக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறது என்றுதான் இதிலிருந்து முடிவுக்கு வர முடியும்.

இந்தியாவிடம் அணுகுண்டுகள் இருக்கலாம். ஆனால், அவற்றைக் கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவுமான உரிமையை இந்தியாவிடமிருந்து அமெரிக்கா இரகசியமாகப் பெற்றிருக்கக் கூடும். இல்லையென்றால், அணுகுண்டு வெடித்த நாயகன் வாஜ்பாயி, ""இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா தனக்கு தேவையான அணு ஆயுதப் பலத்தைத் தீர்மானிக்க முடியாமல் போகும்'' என்று ஏன் அச்சப்பட வேண்டும்? அமெரிக்கா, இந்தியாவைத் தனது நம்பகமான கூட்டாளி என்று ஏற்கும்பட்சத்தில், எந்த உரிமையை வேண்டுமானாலும் அமெரிக்காவின் காலடியில் சமர்ப்பிக்கும் எனப் பலமுறை நாம் சுட்டிக் காட்டியிருக்கிறோம். இந்த ஒப்பந்தம் அதனை உண்மை என நிரூபித்திருக்கிறது.
--------
அமெரிக்காவில் கையெழுத்தாகியுள்ள இந்த இரண்டு ஒப்பந்தங்களும் திடீரென்று உருவானவையல்ல் பா.ஜ.க. ஆட்சியின் பொழுது வெளியுறவுத் துறை மந்திரியாகவும், இராணுவ அமைச்சராகவும் இருந்த ஜஸ்வந்த் சிங்குக்கும், டால்போட் என்ற அமெரிக்க அதிகாரிக்கும் இடையே இரகசியமாக நடைபெற்று வந்த பேச்சு வார்த்தைகள் தான், இப்பொழுது அணு சக்தி ஒப்பந்தமாக உருவாக்கப்பட்டுள்ளது.

ஈராக்கிற்கு இந்தியப் படைகளை அனுப்ப பா.ஜ.க. முயற்சி செய்ததை, காங்கிரசு சட்டபூர்வ ஒப்பந்தமாக இந்தியா மீது திணித்து விட்டது. அதாவது பா.ஜ.க. தொடங்கி வைத்ததை காங்கிரசு முடித்து வைத்திருக்கிறது.

இந்த இரண்டு ஒப்பந்தங்களும், கையெழுத்தாவது குறித்து நாடாளுமன்றத்தில் கூடத் தெரிவிக்காமல், மிகவும் இரகசியமாகவே பேச்சு வார்த்தைகள் நடந்துள்ளன. குறிப்பாக, இராணுவ அமைச்சராக இருக்கும் பிரணாப் முகர்ஜி கலந்தாய்வு ஒன்றில் பங்கு பெறுவதற்காக அöமரிக்காவுக்குச் செல்வதாகக் கூறிவிட்டு, இராணுவ ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டுத் திரும்பினார். இனி, நாடாளுமன்றம் இந்த இரண்டு ஒப்பந்தங்களையும் அங்கீகரிக்கும் ரப்பர் ஸ்டாம்பு சேவையைச் செய்ய வேண்டியது தான் பாக்கி!

முதலாளித்துவ அறிஞர்களால் புனிதமாகக் கருதப்படும் நாடாளுமன்றத்தையே மதிக்காத காங்கிரசிடம், குறைந்தபட்ச பொதுத் திட்டத்தை மதித்து நடக்குமாறு போலி கம்யூனிஸ்டுகள் கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். பா.ஜ.க.வுக்கு மாற்று என காங்கிரசைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கும் போலி கம்யூனிஸ்டுகளிடம், இந்தச் செக்கு மாட்டுத்தனத்தைத் தவிர வேறெதையும் நாம் எதிர்பார்க்க முடியாது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி, அமெரிக்க அடிமைத்தனத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்துள்ளது, போலி கம்யூனிஸ்டுகளின் தயவோடு என்பதே நடப்பு உண்மை!
..
முத்து